சிதம்பரத்தை 3-வது அணிக்கு அழைக்கிறார் ராஜாராம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மூப்பனாருக்கு எதிராக குரல் கொடுத்துள்ள ப.சிதம்பரத்தை 3-வது அணி அமைத்துத் தலைமை தாங்குமாறுஅழைத்துள்ளார் முன்னாள் அமைச்சரும், புரட்சித் தலைவர் அதிமுக தலைவருமான கா.ராஜாராம்.

அதிமுக கூட்டணியில் 47 இடங்களைப் பெற்றுள்ளது தவறு. அதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் மூப்பனாருக்கு, அக்கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள்நிதியமைச்சருமான ப.சிதம்பரம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ப.சிதம்பரத்தின் கோரிக்கை தமிழக அரசியலில் புதிய எதிர்பார்ப்பை உண்டு பண்ணியுள்ளது. அறிக்கை விட்டப.சிதம்பரத்தைக் கண்டித்து தமா.காவில் எதிர்ப்பு எழுந்துள்ளது. சென்னை, மதுரையில் அவரது கொடும்பாவிஎரிக்கப்பட்டது.

ப.சிதம்பரம் அறிக்கை விட்ட பிறகு தனது ஆதரவாளர்களோடு தினசரி ஆலோசனை நடத்தி வருகிறார். 3எம்.எல்.ஏக்கள், ஒரு முன்னாள் எம்.பி, எம்.எல்.ஏ. ஆகியோருடன் அவர் தொடர்ந்து பேசி வருகிறார். சிதம்பரம்புதிய கட்சி தொடங்குவாரா அல்லது பா.ஜ.க., திமுக ஆகிய கட்சிகளில் ஏதாவது ஒன்றில் இணைவாரா என்றகேள்வி எழுந்துள்ளது.

இந்த நிலையில், புதின்கிழமையும் சிதம்பரம் தனது வீட்டில் ஆதரவாளர்களோடு கலந்துரையாடலில்ஈடுபட்டிருந்தார். எம்.எல்.ஏக்கள் புரசைவாக்கம் ரங்கநாதன், சின்னையா மற்றும் முன்னாள் எம்.பி. வள்ளல்பெருமான் ஆகியோர் சிதம்பரத்துடன் நெடு நேரம் ஆலோசனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது முன்னாள் அமைச்சர் கா.ராஜாராம் அங்கு வந்தார். சிதம்பரத்தைத் தனியாகச் சந்தித்துப் பேசிய அவர்பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 3-வது அணி அமைக்குமாறு சிதம்பரத்தை அழைத்துள்ளேன்.பரிசீலிப்பதாக கூறியுள்ளார் என்றார்.

டிஸ்மிஸ் ஆவாரா?

இதற்கிடையே, ப.சிதம்பரம் மீது கட்சிக் கட்டுப்பாட்டை மீறி நடந்து கொண்டதாக ஒழுங்கு நடவடிக்கைஎடுக்கலாமா என்பது குறித்து கட்சி தலைமை அளவில் ஆலோசனை நடந்து வருவதாகத் தெரிகிறது.

அப்படி எடுப்பதாக முடிவு செய்யப்படுமானால், ஒன்று அவர் கட்சியை விட்டு நீக்கப்படலாம், அல்லதுகடுமையாக கண்டிக்கப்படலாம். கட்சியை விட்டு நீக்கப்பட்டால், சிதம்பரம் புதிய கட்சித் தொடங்குவார் எனஅவரது ஆதரவாளர்கள் தரப்பில் பேசப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+