• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வெறும் கையால் வயிற்றை கிழித்து ஆபரேஷன்!

By Staff
|

Orbitoகத்தியின்றி, சத்தமின்றி, மயக்கமின்றி, தயக்கமின்றி ரத்தத்தோடு நடந்த ஆபரேஷன் கோவை அருகே அனைவரையும் அதிசயத்தில் ஆழ்த்தியது. மாஜிக் நிபுணர்சர்க்காரால் ஒரு நிமிடம் தாஜ் மஹாலைக் காணாமல் மறைக்க முடியும். ஆனால், இந்த மருத்துவச் சிகிச்சை கண்முன்னே நடந்த நிகழ்ச்சி மறக்கவேமுடியாது.

பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறில் வேதாத்ரி மகரிஷியின் ஓம்கார மண்டபம் அமைந்துள்ளது. இங்கு மார்ச் 14ம் தேதி ""ஆன்ம சக்தி மற்றும்இயற்கை சக்தி மூலம் குணமாக்குதல் என்ற கருத்தரங்கு நடந்தது.

இந்த கருத்தரங்கில் தான் இந்த மருத்துவ அறுவை சிகிச்சை நடந்தது. பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஹீலர் சர்க்கிள் நிறுவனத் தலைவர் அலெக்ஸ் ஆர்பிட்டோஇந்த விநோத சிகிச்சையைச் செய்தார்.

பொதுமக்கள் முன்னிலையில்..

ஆர்பிட்டோ, வயிற்றி வலியால், இருந்த ஒரு பெண்ணை அழைத்தார். அந்தப் பெண்ணை பார்வையாளர்கள் முன்னிலையில் ஒரு பெஞ்சில் படுக்க வைத்தார். தனதுஉதவியாளராக உள்ள ஒரு பெண்ணிடம், வழியும் ரத்தத்தை துடைக்க ஒரு சில துண்டு "ஸ்பான்ஞ்ச். அருகில் ஒரு கோப்பையில் தண்ணீர்.

பின்னர், நோயாளியான பெண்ணின் கைகளை மடக்கி வைத்தார். பின்னர் அந்தப் பெண்ணின் வயிற்றுப் பாகத்தை கையால் தடவி, எந்த இடத்தில் பாதிப்புஎன்பதை அறிந்து கொண்டு, கண்களை மூடிக் கொண்டு அவரது வயிற்றை கைகளால் கிழித்தார்.

அப்போது வழிந்த ரத்தத்தை அவரது உதவியாளர்கள் கோப்பையில் வைக்கப்பட்டிருந்த தண்ணீரில் ஸ்பாஞ்சைநனைத்து துடைத்தெடுத்தனர். வலது கையை வயிற்றிற்குள் விட்டு ஏதோ கருப்பாக ஒரு ரத்தக் கட்டியை எடுத்தார்.அதை ஆபரேஷனில் இருந்த பெண்ணிடம் காண்பித்தார்.

பின்னர் வயிற்றை கையால் மூடி தடவினார். வயிறு சரியானது. ஆபரேஷன் நடந்த சுவடே தெரியாமல், போனது.தையல் இல்லை. அந்தப் பெண்ணிற்கு மயக்க மருந்து கொடுக்கப்படவில்லை. அப்பெண், உடனே எழுந்துவழக்கம் போல நடக்கத் தொடங்கினார்.

இந்த நிகழ்ச்சி விழாவிற்கு வந்திருந்த நூற்றுக்கும் அதிகமானோர் மற்றும் வேதாத்திரி மகிரிஷி, முன்னாள் சி.பி.ஐடைரக்டர் கார்த்திகேயன், தொழிலதிபர் மகாலிங்கம், ஆகியோர் முன்னிலையில் நிடந்தது.

இந்த ஆபரேஷன் செய்த அலெக்ஸ் ஆர்பிட்டோ கூறியதாவது:

எனக்கு இத்தகைய சக்தி, இயற்கையிலேயே 14 வது வயதிலேயே ஏற்பட்டு விட்டது. பள்ளிக்குச் சென்று இதுதொடர்பாக நான் எதுவும் படிக்கவில்லை. இது இறைவனின் சக்தி. நான் இந்தியாவிற்கு வந்து சாய்பாபா மற்றும்வேதாத்திரி மகரிஷி ஆகியோரைச் சந்தித்தேன்.

இது எனக்குள் பெரும் மாறுதலை ஏற்படுத்தியது. உலகில் கடவுள் ஒன்று தான், ஆனால் நாம் தான் வேறு வேறுபெயர்களில் அழைத்துக் கொண்டுள்ளோம். இந்த நூற்றாண்டு மனிதனை முன்னேற்றப் பாதையில் அழைத்துச்செல்லும் நூற்றாண்டாக அமையும். இயற்கையில் குணமாக்கும் இந்த அரிய சக்தி, பல மில்லியன் மக்களுக்குப்பயனளிக்கிறது என்றார்.

ஆர்பிட்டோவை ஆராய்ச்சி செய்த ரினால்டோ லம்பிஸ் என்ற இத்தாலிய மின்னணுத் துறை இன்ஜினியர்,ஆர்பிட்டோவின் இடது கரம் உலோகக் கரம் போன்றது.

இந்த கையில் தான் அவர் நோயாளியின் ரத்த ஓட்டத்தைக் கட்டுப்படுத்திக் கொள்கிறார். வலது கரத்தில் ஆன்மீகசக்தி உள்ளது. இந்த சக்தியில் தான் அவர் உடலில் தேவையற்று தங்கியிருக்கும் பொருளை கண்டறிந்துஅகற்றுகிறார். (இது நெகட்டிவ் மெடீரியல் என அழைக்கப்படுகிறது)

வேதாத்திரி மகரிஷி இது குறித்து அளித்த விளக்கத்தில், மனிதன், உயிர்காந்த அடிப்படையில் மனிதனின்இயக்கத்தைக் கட்டுப்படுத்த முடியும். இத்தகைய செயல்முறை கடந்த காலங்களில் இருந்தது. இந்த முறைபல்வேறு காரணங்களால் அழிந்து போய் விட்டது என்றார்.

எது எப்படியோ, குடலை உருவி மாலையாகப் போட்டுக் கொள்ளமல் இருந்தால் சரி!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X