புதிய பேரவை துவக்கினார் ப.சிதம்பரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழ் மாநில காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை என்ற புதிய அமைப்பைத் துவக்கியுள்ளார்முன்னாள் மத்தியநிதியமைச்சரும், த.மா.கா மூத்த த லைவருமான ப.சிதம்பரம்.

அதிமுகவுடன், தமாகா கூட்டணி வைத்துள்ளதை மறு பரிசீலனை செய்யுமாறு, தமாகா த லைவர் மூப்பனாருக்கு 2அறிக்கைகள் மூலம் கோரிக்கை விடுத்திருந்தார் ப.சிதம்பரம். ஆனால் அதற்கு எந்தப் பதிலும், தமாகா தரப்பில்தரப்படவில்லை. இந்த நிலையில், மூப்பனாரை நேரில் சந்தித்தும் இதுகுறித்து வேண்டுகோள் விடுத்தார் சிதம்பரம்.

இந்தச் சூழ்நிலையில், த.மா.கா. ஜனநாயகப் பேரவை என்ற புதிய அ மைப்பைத் துவக்கியுள்ளார் சிதம்பரம்.இதுகுறித்து சென்னையில் உள்ள தனது வீட்டில் வெள்ளிக்கிழமை மாலை செய்தியாளர்களிடம் ப.சிதம்பரம்தெரிவித்ததாவது:

11.3.2001 மற்றும் 12 ஆகிய தேதிகளில் தமாகா, அதிமுகவுடன் செய்து கொண்டுள்ள கூட்டணி ஏற்பாட்டை மறுபரிசீலனை செய்யுமாறு கோரி தமாகா தலைவர், மதிப்பிற்குரிய மூப்பனார் அவர்களுக்குக் கோரிக்கைவிடுத்திருந்தேன். மறுபரிசீலனை உண்டா, இல்லையா என்றும் கேட்டிருந் தேன். ஆனால் இதுவரைஅவர்களிடமிருந்து எந்தப் பதிலும் இல்லை.

30 இடங்களைப் பெறுவதற்காக அதிமுக தலைமையிலான தனிக்கட்சி ஆட்சி அமையும் வகையில் தொகுதிப்பங்கீட் டை த.மா.கா செய்து கொண்டுள்ளது. ஆனால் அதிமுக தலைமையில் நல்லாட்சி அமையும் என்று நான்நம்பவில்லை. இந்த விவகாரத்தில் எனக்கு 2 வகையான வருத்தம் உண்டாகியுள்ளது.

த.மா.கா.வுக்கு கெளவரமான ஏற்பாடு அல்ல என்பது ஒரு வருத்தம். த.மா.கா வாக்காளர்களுக்கு இந்த ஏற்பாடுஎந்தவித திருப்தியையும் தரவில்லை என்பது இன்னொரு வருத்தம்.

த.மா.கா தலைவர் மூப்பனார் உடல் நலம் குன்றியுள்ளார். இந்த நேரத்தில், அவரது உடல் நலமின்மையைப்பயன்படுத்தி கட்சிக்குள் இருக்கும் சிலர் தங்கள் இஷ்டப்படி முடிவுக்கு வந்துள்ளனர். இதுவே இந்தப்பிரச்சினைக்குக் காரணம். த.மா.கா வைப் பொருத்தவரை தலைவர் இருக்கிறார், ஆனால் தலைமை இல்லை.

கடந்த 3 நாட்களாக எனக்கு வந்த நூற்றுக்கணக்கான போன்கள், கடிதங்கள், நேரில் விசாரிப்புகள் ஆகியவற்றின்முடிவில் சில முடிவுக ளை நான் எடுத்துள்ளேன்.

1. நானும், எனது கருத்தை நம்புபவர்கள், ஆதரிப்பவர்கள் அனைவரும் த.மா.கா வைச் சேர்ந்தவர்கள். இந்தக்கருத்துக்களைச் சொல்லியுள்ளதால் எங்களை கட்சியிலிருந்து யாராலும் பிரிக்க முடியாது. நாங்கள் த.மா.கா வைவிட்டும் போக மாட்டோம்.

2. தமிழகத்தில் நல்லாட்சி அமைய, தமாகா செய்து கொண்டுள்ள ஏற்பாடு உதவாது என்ற கருத்தை த.மா.காதொண்டர்கள் மற்றும் தமிழக மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்காக, பிரசாரம் செய்வதற்காக புதிய அமைப்பைத் துவக்கியுள்ளார்.

இதற்கு தமிழ் மாநில காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை என்று பெயரிட்டுள் ளோம். இது ஒரு தற்காலிக அமைப்பு.தேர்தல் முடியும் வரை இந்த அ மைப்பு இருக்கும். தேர்தல் முடிவதற்குள் தமாகா, 1996-ம் ஆண்டு உருவானபோது, எந்த லட்சியத்தின் அடிப்படையில் பிறந்ததோ அதை உணர்ந்து, தனது பாதைக்குத் திரும்பினால் இந்தஅமைப்பும் க லைக்கப்படும். ஒருங்கிணைந்த தமாகா தலைமையின் நாங்களும் செயல்படுவோம்.

3. எனது கருத்தை ஆதரிக்கும் நண்பர்கள் சிலர் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று கோரியுள்ளனர்.இதுகுறித்து ஓரிரு நாட்களில் முடிவு எடுத்து அறிவிப்பேன்.

4. தமாகா-அதிமுக கூட்டணி ஏற்பாடு தவறு, இதன் மூலம் தமிழகத்தில் நல்லாட்சி அமைய வாய்ப்பில்லை என்றுஇந்த அமைப்பு தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்யும்.

5. எங்களது கருத்தில் நம்பிக்கை கொண்ட தமாகா மாவட்டச் செயலாளர்கள், வட்டச் செயலாளர்கள், ஊராட்சிமன்றப் பொறுப்பில் உள்ளவர்கள் எங்களுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று விரும்புகிறோம். இந்தத்தேர்தலில் எங்களுக்குத் துணை நிற்க உதவி புரிய வேண்டும்.

6. 1996-ம் ஆண்டு பிறந்து, 2001ம் ஆண்டு தடுமாற்றத்தில் நின்று கொண்டுள்ள தமாகா வை மீண்டும்அடித்தளத்துடன் கூடியதாக புதுப் பொலிவுடன் அமைப்போம்.

ஒவ்வொரு செங்கல்லாக சேகரித்து புதிய கட்டடிமாக இதை எழுப்புவோம். த.மா.கா உருவானதன் லட்சியத்தைநிறைவேற்ற தொடர்ந்து பாடுபடுவோம் என்றார் சிதம்பரம்.

பின்னர் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அவர் பதிலளிக் கையில், நாங்கள் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை. தமாகா, செய்து கொண்டுள்ள ஏற்பாடு நல்லாட்சி அமைய உதவாது என்றுதான் பிரசாரம் செய்யப்போகிறோம்.

இது தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த்தை நான் சந்திக்கவில்லை. முதல்வர் கருணாநிதியையும் சந்திக்கவில்லை. நான்வியாழக்கிழமை மூப்பனா ரைச் சந்திக்கக் காரணம், என்னைப் பார்க்க வேண்டும் என்று அவர் விரும்பியதாக சிலர்மூலம் அறிந்தேன்.

உடனடியாக அவரைச் சந்தித்தேன். அவரது உடல் நிலை குறித்து விசாரித் தேன். அவருக்குப் பேரக் குழந்தைபிறந்துள்ளது. அதற்காக வாழ்த்துத் தெரிவித்தேன். கூட்டணி குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றுகேட்டுக் கொண்டேன். அவர் ஒன்றும் சொல்லவில் லை. நான் சொன்ன தைக் கேட்டுக் கொண்டார்.

இந்தத் தேர்தலில் ஜெயலலிதா மீது ஊழல் புகார்களில் தண்டனை கொடுக்கப்பட்டுள்ளதால் அவரால் தேர்தலில்நிற்க முடியாது என்பது உறுதியாகி விட்டது. எனவே அதிமுக தலைமையிலான கூட்டணி ஆட்சி யைப் பிடித்தால்,ஜெயலலிதா முதல்வராக நியமிக்கும் நபரை தமிழ் மாநில காங்கிரஸ் ஏற்றுக் கொள்ளுமா என்பதை த.மா.காதலைமை விளக்கமளிக்க வேண்டும்.

புதிதாக கட்சி துவக்கும் எண்ணம் இல்லை. இருக்கும் கட்சிகளில் ஒன்றுக்குத்தான் வாக்காளர்கள் வாக்களிக்கவேண்டும். எங்கள் அமைப்பு வெறும் பிரசாரத்திற்கு மட்டுமே. தேர்தலுக்குப் பின் த.மா.கா தனது ப ழையபாதைக்குத் திரும்பி விட்டால், இந்த அமைப்புக்கு வேலையில்லை.

கடந்த 25 வருடங்களாக எனக்கு ஒரே தலைவர் மூப்பனார்தான். அவர் கீழ் செயல்பட எனக்கு வாய்ப்பு கிடைத்தால்எனக்கு மெத்த மகிழ்ச்சியே.

1996ல் த.மா.கா உருவான போது, தேர்தல் துவங்கி விட்டது. வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுகொண்டிருந்தன. கடைசி நிமிடத்தில்தான் தமாகா வேட்பாளர்கள் வேட்பு மனுக்க ளைத் தாக்கல் செய்தனர்.எனவே எங்களால் நல்லாட்சி அமைய வேண்டும், பொது செயல் திட்டம் கொண்டு வர வேண்டும் என்று திமுககூட்டணியைக் கேட்டுக் கொள்ள முடியவில் லை. அதற்கு நேரம் அப் போது இல்லை. இப்போது அப்படி அல்ல.

அதிமுக,. திமுக ஆட்சி யை ஒப்பிட்டுப் பார்த்தால், திமுகதான் சிறந்த ஆட்சி யைத் தந்துள்ளது என்று நான்கூறுவேன். மக்களுக்குத் தேவையான திட்டங்களை வேகமாகவும், ஊழலற்ற வகையிலும் நிறைவேற்றிய ஆட்சிதிமுக ஆட்சிதான். இருப்பினும் இதை விட சிறந்த ஆட்சியைத் தர தமாகாவால் முடியும் என்று உறுதியாகநம்புகிறேன். 2006-ல் தமிழகத்தில் தமாகா தலைமையில் நல்லாட்சி அமையும் என்று உறுதியாக கூறிக்கொள்ளுகிறேன்.

மாநிலத்தில் நல்லாட்சி, மத்தியில் பொருளாதார சீர்திருத்தங்களை சரி வர நிறை வேற்றி, 2020ம் ஆண்டுக்குள்இந்தியாவில் வறுமையே இல்லை என்ற நிலைக்காக உழைக்கும் ஆட்சி ஆகிய வைதான் எனது வாழ்க்கைலட்சியம்.

டெஹல்கா.காம் நிறுவனம், பாதுகாப்புத் துறை தொடர்பான ஊழலை வெளிப்படுத்தியுள்ளது, நாட்டில் உள்ளூறப்பரவியுள்ள புற்று நோயை வெளிப்படுத்தியுள்ளதையே காட்டுகிறது.

இந்தப் பிரச்சினைக்காக பிரதமர் வாஜ்பாயை ராஜினாமா செய்யச் சொல்வது மிக எளிது. ஆனால் இன்னொருதேர்தலை நாடு தாங்காது. அதற்குப் பதில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது பிரதமர் கடும்நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் சிதம்பரம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+