வாஜ்பாய்க்கு நாயுடு ஆதரவு

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்:

சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணியை ஆதரிக்க உள்ளது. மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ்கூட்டணியிலிருந்து விலகிய நிலையில் தெலுங்கு தேசம் கட்சியின் ஆதரவு வாஜ்பாய் அரசிற்கு முக்கியமானதாக இருக்கிறது.

9 எம்.பிக்களை கொண்ட மம்தா விலகிய போதும் வாஜ்பாய் அரசிற்கு 19 எம்.பிக்கள் அதிகம் உள்ளனர். 29 எம்பிக்களை கொண்ட தெலுங்குதேசம் வெளியேறினால் வாஜ்பாய் அரசு பதவியிழக்கக்கூடும்.

தொடர்ந்து வாஜ்பாய் அரசை ஆதரிப்பதன் மூலம் கூட்டணியில் தனது செல்வாக்கை உயர்த்திக்கொள்ள நாயுடு திட்டமிட்டுள்ளார். மம்தாவின் விலகல்குறித்தோ, மேற்கு வங்க முன்னாள் முதல்வர் ஜோதிபாசு தலைமையில் உருவாகியுள்ள மக்கள் முன்னணி குறித்தோ பதிலளிக்க நாயுடு மறுத்து விட்டார்.

ஆயுத பேர ஊழல் வெளிப்பட்டதில் இருந்து பிரதமர் மூன்று முறை ஆந்திர முதல்வரை தொடர்பு கொண்டு இது குறித்து விவாதித்துளளார். இந்த ஊழல்தொடர்பாக சுப்ரீம் கோர்ட் நீதிபதியின் விசாரணை கோரியிருந்தார் நாயுடு. தற்போது அதற்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+