பாஜக வை எதிர்த்து நாடு தழுவிய போராட்டம்: காங்.

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

ஆயுதப் பேர ஊழலில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பாரதிய ஜனதா கட்சி நாட்டின் ஒழுக்க நெறிகளை மீறி விட்டது.பாஜக புரிந்துள்ள ஆயுதப் பேர ஊழலுக்குக் கண்டனம் தெரிவித்து நாடு தழுவிய போராட்டம் நடத்தத்திட்டமிட்டுள்ளோம் என்று அகில இதிய காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

பெங்களூரில் நடந்து வரும் காங்கிரஸ் கட்சியின் 81 வது மாநாட்டில் கலந்து கொண்டு பேசுகையில் சோனியாகாந்தி கூறியதாவது:

மக்கள் மத்தியில் நம்பிக்கையை இழந்து விட்டது பாரதிய ஜனதா கட்சி. பிரச்சனைகளை எதிர்த்துப் போராடும்வலிமை கொண்டது காங்கிரஸ் கட்சி.

மதவாத, ஊழல் நிறைந்த கட்சி ஆட்சியில் இருப்பது அவமானம். ஊழலை எதிர்த்தும், மதவாதத்தை எதிர்த்தும்காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்தும்.

ஆயுதப் பேர ஊழல் நடத்தி அப்பாவி மக்களை ஏமாற்றி விட்டது பாஜக. இதை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.இவ்விஷயத்தில் கருணை காட்டவும் கூடாது. அவர்கள் செய்த தவறை மறக்கவும் கூடாது.

நம் இந்திய கிராமங்களில் ஒரு வேளை சோற்றுக்கே பாமர மக்கள் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்தநிலையில் கேவலம் ஒரு லட்ச ரூபாய்க்காக விலை போய் விட்டது பாஜக அரசு.

பாரதிய ஜனதா கட்சியின் ஊழலை எதிர்த்து காங்கிரஸ் கட்சி நாடு தழுவிய போராட்டம் நடத்தும். பொதுமக்களின்உணர்வுகளைப் பறைசாற்றும் வகையில் போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளது காங்கிரஸ். இந்தப் போராட்டத்தில்வன்முறை இருக்காது.

காஷ்மீரிலும் சண்டைநிறுத்தம் அறிவித்து அமைதிப் பேச்சுவார்த்தைக்கு முட்டுக்கட்டை போட்டுக் கொண்டுசெயல்பட்டு வருகிறது வாஜ்பாய் அரசு.

ஒரு பக்கம் மதவாதம். மறுபக்கம் ஊழல் என்று ஆட்சி நடத்தி வருகிறது பாஜக. இதைப் பார்த்துக் கொண்டுகாங்கிரஸ் கட்சி ஒரு போதும் அமைதி காக்காது.

வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தமிழ்நாடு, அசாம், மேற்கு வங்காளம், பாண்டிச்சேரி மற்றும் கேரளாவில்சட்டசபைத் தேர்தல் வருகிறது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் பிரமுகர்கள் தங்களிடம் இருக்கும் வேறுபாடுகளைஎல்லாம் களைந்து விட்டு ஒற்றுமையாக செயல்பட வேண்டும்.

இவ்வாறு காங்கிரஸ் மாநாட்டில் சோனியா காந்தி பேசினார்.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+