பா.ஜ.க ஆட்சியை கவிழ்ப்போம்: காங்.
ராஜீவ்காந்தி நகர் (பெங்களூர்):
ஆயுத பேர ஊழல் குற்றச்சாட்டிற்கு உள்ளான பா.ஜ.க. அரசை வெளியேற்றுவதற்கான காங்கிரஸ் கட்சியின் திட்டம் திங்கள் கிழமை டெல்லியில்வெளியிடப்படும் என அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி தெரிவித்தார்.
பெங்களூரில் நடைபெற்று வரும் காங்கிரஸ் கட்சியின் 81வது மாநாட்டில் பேசிய சோனியா, மத்தியில் ஆளும் வாஜ்பாய் அரசை கடுமையாக விமர்சித்தார்.தனது உரையில் சோனியா தெரிவித்த கருத்துகள்:
நடைபெற உள்ள 5 மாநில தேர்தல்களில் பா.ஜ.க. அரசின் ஆயுத பேர ஊழலை முக்கிய ஆயுதமாக காங்கிரஸ் பயன்படுத்தும்.
ஆயுத பேர ஊழலை அடுத்து பா.ஜ.க.அரசை ஆட்சியில் இருந்து வெளியேற்றுவது குறித்து காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர்களுடன் விவாதிக்கப்பட்டது.
இது தொடர்பான கட்சியின் திட்டம் விரைவில் இறுதி செய்யப்பட்டு திங்கள் கிழமை டெல்லியில் வெளியிடப்படும்.
தற்போதைய ஊழல் மிகுந்த மதவாத ஆட்சி பற்றி மக்களிடம் எடுத்து கூறி நாட்டை காப்பாற்ற காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் முயல வேண்டும் எனகேட்டுக்கொண்டார் சோனியா.
மத்தியில் ஆட்சி அமைக் த் தயார்:
முன்னதாக, சனிக்கிழமை பெங்களூர் அரண்மனை மைதானத்தில் தொடங்கிய காங்கிரஸ் மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சிகளுடன் சேர்ந்து மத்தியில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சி தயாராக இருக்கிறது.
நாட்டின் பாதுகாப்பையே சீர்குலைக்கும் வகையில் மிகவும் கீழ்த்தரமாக ஆயுதப் பேர ஊழலில் ஈடுபட்டுள்ள வாஜ்பாய் அரசு பதவி விலக வேண்டும்.
மதவாத சக்திகளை முறியடிக்க காங்கிரஸ் கட்சியால் மட்டுமே முடியும்.
வாஜ்பாய் ஆட்சியால் காஷ்மீரில் அமைதியில்லாத சூழ்நிலை உருவாகியுள்ளது. அங்கு போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்ட நிலையிலும் அங்கு வன்முறை தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.
பாஜக கூட்டணியிலிருந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பிரிந்தது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று.
மதவாத சக்திகளை எதிர்க்கிறோம் என்று கூறிக் கொண்டு பாஜக வுடன் கூட்டணி வைத்துக் கொண்டிருக்கிறது திமுக அரசு.
தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில் திமுக அரசை கீழிறக்குவதே காங்கிரஸின் குறிக்கோள். புதுவையில் காங்கிரஸ் கட்சியும், தமிழ் மாநில காங்கிரஸ்கட்சியும் அமோக வெற்றி பெற்று ஆட்சியமைக்கும்.
ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக, காங்கிரஸ் மாநாட்டில் குஜராத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஒரு நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.
யு.என்.ஐ












Click it and Unblock the Notifications