வேட்பாளர் பட்டியல் வெளியிட்டது குட்டிக் கட்சி
சென்னை:
பெரிய கட்சிகளே வேட்பாளர்களைத் தேர்வு செய்வதில் திணறும் போது சமீபத்தில் பிறந்த புதிய கட்சியான புரட்சித் தலைவர் அதிமுக தனது முதல்வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இக்கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.டி.சோமசுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
புரட்சித் தலைவர் அதிமுகவின் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கட்சித் தலைவர் ராஜாராம் பனைமரத்துப் பட்டியில் போட்டியிடுகிறார்.துணைத் தலைவர் வி.வி.சுவாமிநாதன் புவனகிரி தொகுதியிலும், பொருளாளர் ராஜாமுகமது வாணியம்பாடி தொகுதியிலும் போட்டியிடுகிறார்கள்.
மேலும், சாதிக்சார் (ராணிப்பேட்டை), மாரியப்பன் (சங்கரன்கோவில்), சண்முகக் குமார் (சேரன்மகாதேவி), குமரன் (திருவள்ளூர்), பன்னீர்செல்வம்(திருத்தணி), ஈ.வி.கே.சண்கம் (ஈரோடு), டாக்டர் மகாதேவன் பிள்ளை (அண்ணா நகர்) ஆகியோரும் தேர்தலில் போட்டியிடுகிறார்கள் என்றுஅறிக்கையில் கூறப்பட்டிருந்தது.