இந்திய பொருளாதாரம்: கவலைப்படுகிறார் முன்னாள் பிரதமர்
சேலம்:
இந்தியாவின் கடன் தொகை அதிகரித்து வருவதால், இந்தியா பொருளாதார நெருக்கடியில் சிக்கி வருகிறது என முன்னாள் பிரதமரும் சமாஜ்வாடிஜனதாக் கட்சியின் தலைவருமான சந்திரசேகர் கவலை தெரிவித்துள்ளார்.
ஏற்காட்டிற்கு ஓய்வெடுக்க வந்த முன்னாள் பிரதமர் சந்திரசேகர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
நாட்டின் நிலவரம் மிகவும் மோசமான நிலையில் இருந்து வருகிறது. பொருளாதாரம் முதல் அனைத்தும் தடமாறி நடக்கிறது. தாராளமயமாக்கல்கொள்கை, பெரும் அந்நிய நாட்டு முதலீட்டுக்கு வழி வகுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த முதலீட்டால் இந்தியாவில் தொழில்கள்தொடங்க வாய்ப்பு ஏற்பட்டு வேலை வாய்ப்புகள் பெருகும் எனக் கூறப்பட்டது.
ஆனால், அவ்வாறு இல்லாமல், எதிர்பார்த்த அளவிற்கும் குறைவான முதலீடுகளே கிடைத்தன. வேலை வாய்ப்பு உயரவில்லை. வெளிநாட்டுக்கம்பெனிகள் நுகர்வோர் பொருட்கள் உற்பத்தியில் மட்டுமே ஈடுபட்டதே ஒழிய, அடிப்படைத் தொழில்கள் எதிலும் ஈடுபடவில்லை.
மத்திய அரசு மேலும், மேலும் கடன் பெற்று கடன் வலையில் சிக்கித் தவித்து வருகிறது. இதனால் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்படும் நிலைஏற்பட்டுள்ளது. உள்நாட்டில் பூசல்கள், ஊழல்கள் அதிகரித்து விட்டன. இவற்றையெல்லாம் தீர்க்க அந்நிய நாட்டு ஆலோசனையைப் பெற வேண்டியகட்டாயம் ஏற்பட்டுள்ளது.
டெஹல்கா.காம் கிளப்பிய ஆயுத பேர ஊழலை விசாரணை செய்ய உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையிலான விசாரணைக் கமிஷன் தேவையில்லை. சி.பி.ஐவிசாரணையே போதுமானது.
ஊழலை ஒழிக்க அனைத்து அரசியல்வாதிகளையும் அழைத்து ஆலோசனை நடத்த வேண்டும். இந்த ஆலோசனைக்கு இப்போது எந்த அரசியல்வாதியும்தாயராக இல்லை. ஊழலை ஒழிப்பதில் அரசியல்வாதிகள் யாரும் ஆர்வம் காட்டுவதில்லை என்றார் சந்திரசேகர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications