தி.மு.க. அணியிலிருந்து ப.சிதம்பரம் விலகல்?

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ப.சிதம்பரத்தின் தமிழ் மாநில காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை என்ற அமைப்புக்கு தி.மு.க அணியில்ஒதுக்கப்பட்டுள்ள 3 சீட்டுக்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடசிதம்பரம் விரும்பவில்லை என்பதால் தொகுதிகள் ஒதுக்கீடு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தமிழ் மாநில காங்கிரஸ் தலைமையை எதிர்த்து புதிய அமைப்பு தொடங்கியுள்ளார் சிதம்பரம். தனது அமைப்புதி.மு.க கூட்டணிக்கு ஆதரவு தருவதாக தெரிவித்த சிதம்பரம் தி.மு..க தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்தும்ஆதரவு தெரிவித்தார்.

அவரது பேரவைக்கு இந்தத் தேர்தலில் 3 தொகுதிகள் ஒதுக்கப்படுவதாக கருணாநிதி அறிவித்தார். இதற்கானஒப்பந்தத்தில் பேரவை சார்பில் புரசைவாக்கம் எம்.எல்.ஏ. ரங்கநாதன் கையெழுத்திட்டார்.

இந்த நிலையில், சிதம்பரத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள 3 தொகுதிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.சிதம்பரத்துடன் நேரில் சந்தித்துப் பேசிய பின் இது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று தி.மு.க. தரப்பில்தெரிவிக்கப்படுகிறது.

உதயசூரியன் சின்னத்தில் நிற்க பிடிக்கவில்லை என்றும், கூடுதல் தொகுதிகள் தேவை என்றும் சிதம்பரம் தரப்பில்,தி.மு.கவிடம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதற்குத் தி.மு.க. தரப்பில் சம்மதம் கிடைக்கவில்லை. மேலும் கொடுத்ததொகுதிகளையும் நிறுத்தி வைத்து விட்டார் கருணாநிதி.

இதையடுத்து தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வரும் சிதம்பரம், தனித்து போட்டியிடலாமா எனயோசித்து வருகிறார்.

இந்நிலையில், ப.சிதம்பரத்தை, புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம், செவ்வாய்க்கிழமை சந்தித்து பேசினார்.மூன்றாவது அணி அமைத்துள்ள சண்முகம் சிதம்பரத்தை சந்தித்திருப்பது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாககருதப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+