நாளை முதல் தி.மு.க. வேட்பாளர்கள் தேர்வு
சென்னை:
தி.மு.க சார்பில் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட விண்ணப்பம் செய்துள்ள தி.மு.கவினரிடம் புதன்கிழமை முதல்26-ம் தேதி வரை நேர்காணல் நடைபெறவுள்ளது.
சட்டசபைத் தேர்தலுக்குப் போட்டியிட விரும்பிய தி.மு.கவினர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களிடம் தற்போதுநேரடி இன்டர்வியூ நடைபெறவுள்ளது. முதல்வரும், தி.மு.க தலைவருமான கருணாநிதியும், கட்சிப் பொதுச்செயலாளர் அன்பழகனும் நேரடியாக கேள்விகள் கேட்டு வேட்பாளர்களைத் தேர்வு செய்யவுள்ளனர்.
புதன்கிழமை இந்த நேர்காணல் துவங்குகிறது. 24-ம் தேதி வரை இது நீடிக்கும். தினசரி காலை 9.30 மற்றும் மாலை4.30 மணி ஆகிய இரு நேரங்களில் நேர்காணல் நடக்கும்.
நேர்காணலுக்கு வரும் விண்ணப்பதாரர்கள் தங்களுடன் ஆதரவாளர்களையோ அல்லது சிபாரிசுடனோ வரக்கூடாது என்று கட்சித் தலைமை கண்டிப்புடன் விண்ணப்பதாரர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
கட்சித் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நேர்காணல் நடக்கிறது.












Click it and Unblock the Notifications