தொகுதிகளைத் தேர்வு செய்ய கூடுகிறது புதிய தமிழகம்
சென்னை:
புதிய தமிழகம் சார்பில் போட்டியிடக் கூடிய தொகுதிகள் குறித்து அடையாளம் காண்பதற்காக கட்சியின்நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் மதுரையில் 24- தேதி நடைபெறவுள்ளதாக அக்கட்சித் தலைவர்டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள புதிய தமிழகம் கட்சிக்கு சட்டசபைத் தேர்தலில் 10 இடங்கள்ஒதுக்கப்பட்டுள்ளன. இதையடுத்து தங்களுக்குத் தேவையான தொகுதிகள் குறித்து அக்கட்சி ஆராயத்துவங்கியுள்ளது. இதன் முதல் கட்டமாக மதுரை தக்கம் அரங்கில் 24-ம் தேதி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது.
இக்கூட்டத்தில் கட்சியின் மாநில, மாவட்ட, வட்டார அளவிலான செயல்வீரர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.இதுகுறித்து கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,மதுரையில் நடக்கும் கூட்டத்தில் எங்களுக்கு வெற்றியைத் தரக் கூடிய தொகுதிகள் குறித்து விவாதிப்போம்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட வண்டிச் சின்னத்தையே இப்போதைய தேர்தலிலும் ஒதுக்குமாறுதேர்தல் கமிஷனுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளோம்.
10 தொகுதிகள் மட்டுமல்லாது, திமுக கூட்டணி போட்டியிடும் 234 தொகுதிகளிலும் வெற்றி பெற பாடுபடுவோம்என்றார் கிருஷ்ணசாமி.












Click it and Unblock the Notifications