ஸ்டாலின் சொத்துக்குவிப்பு வழக்கு தள்ளுபடி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, சென்னை நகர மேயரும், முதல்வர் கருணாநிதியின் மகனுமானஸ்டாலின் மீது கூறப்பட்ட புகாரை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.

இதுகுறித்த விவரம் வருமாறு:

சிவகாசியைச் சேர்ந்தவர் செண்பகமூர்த்தி. இவர் கடந்த மாதம் மேயர் ஸ்டாலினுக்கு எதிராக சென்னை முதன்மைசெஷன்ஸ் கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்தார்.

அந்த மனுவில் சென்னை நகர மேயர் ஸ்டாலின் வருமானத்துக்கு அதிகமாக ரூ 8 கோடி சேர்த்திருப்பதாகவும், இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் விசாரணை நடத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து இந்த மனு குறித்து செஷசன்ஸ் கோர்ட் நீதிபதி அசோக் குமார் விசாரித்தார். கோர்ட் சம்மன்அனுப்புவதற்குள் மேயர் ஸ்டாலின் நீதிமன்றத்துக்குச் சென்று, இந்த வழக்கு குறித்து நான் எந்த விசாரணைக்கும்தயார். என்னிடம் உள்ள சொத்துக்கள் அனைத்தும் நான் முறையாக சம்பாதித்தது. என் ஒவ்வொரு பைசாவுக்கும்கணக்கு உள்ளது என்று கூறினார்.

இதற்குப்பின்னர் இந்த வழக்கு குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் 15 நாட்களுக்குள் விசாரணை நடத்திஅறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார் நீதிபதி அசோக் குமார்.

இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் ஸ்டாலின் மீதான வழக்கு குறித்து விசாரணை நடத்தினர். பின்னர்அவர்கள் செஷசன்ஸ் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்தனர்.

அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தாரிடம் உள்ள சொத்துக்களுக்கு முறையான கணக்கு உள்ளது. அவர்கள்வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்திருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு எவ்வித ஆதாரமும் இல்லை என்றுதங்கள் அறிக்கையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் கூறியிருந்தனர்.

இந்த வழக்கு செஷன்ஸ் கோர்ட்டில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிஅசோக்குமார் கூறியதாவது:

ஸ்டாலினுக்கு உள்ள வீடு மற்றும் நிலங்கள் எப்படி வந்தது என்று மனுதாரர் செண்பகமூர்த்தி கேள்விஎழுப்பியுள்ளார்.

ஸ்டாலின் மேயராகப் பொறுப்பேற்றுக் கொண்ட பின் அவருக்குக் கிடைத்த வருமானம், அவரது மனைவியின்வருமானம், மகனுக்குக் கிடைத்து அலவன்ஸ் தொகைகள் ஆகியவை மூலம் தான் அவர்கள் வீடு மற்றும் நிலம்வாங்கியுள்ளனர்.

லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சரியாக விசாரணை நடத்தவில்லை என்று மனுதாரர் கூறுவது தவறு. ஏனெனில்ஸ்டாலினுக்கு எதிராக மனுத் தாக்கல் செய்யப்பட்ட உடனேயே அவர் செஷசன்ஸ் கோர்ட்டுக்கு வந்து தான்குற்றமற்றவர் என்றும், தான் எந்த விசாரணைக்கும் ஒத்துழைப்பு கொடுக்கத் தயார் என்றும் வாக்குமூலம் அளித்தார்.ஸ்டாலின் மீதான குற்றச்சாட்டை செஷசன்ஸ் கோர்ட் தள்ளுபடி செய்கிறது.

இவ்வாறு நீதிபதி அசோக்குமார் தனது தீர்ப்பில் கூறியிருந்தார்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+