வந்தது 3-வது அணி!
சென்னை:
தமிழகத்தில் பகுஜன் சமாஜ் கட்சி தலைமையில் 9 குட்டிக் கட்சிகள் இணைந்து 3-வது அணி என்று தங்களைஅழைத்துக் கொண்டுள்ளன.
இந்த அணியின் ஒருங்கிணைப்புக் கூட்டம் சென்னையில் திங்கள்கிழமை நடந்தது. 3-வது அணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் தேசியவாத காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி, ராஷ்ட்ரிய ஜனதாதளம், சமாஜ்வாடி கட்சி, லோக்ஜன் சக்தி, தமிழ் தன்னுரிமை இயக்கம், புரட்சித் தலைவர் அதிமுக, இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ் மாநிலவாக்காளர் பேரவை.
இந்தக் கட்சிகளின் சார்பில் வந்திருந்த பிரதிநிதிகள் கூடி, திமுக, அதிமுகவுக்கு மாற்றாக 3-வது அணியைஉருவாக்குவது எனவும், அதற்கு மக்கள் ஜனநாயக முன்னணி எனப் பெயரிடுவது எனவும், பகுஜன் சமாஜ் கட்சிதலைமை தாங்குவது எனவும் தீர்மானித்தனர்.
அணித் தலைவராக பகுஜன் சமாஜ் கட்சியின் ராஜாங்கம் தேர்வு செய்யப்பட்டார். அமைப்பாளராக ஜி.பி.சாரதிதேர்வானார்.












Click it and Unblock the Notifications