பஸ்-சுமோ மோதல்: எஸ்.ஐ.உள்பட 6 பேர் சாவு
ஒட்டன்சத்திரம்:
கோவையிலிருந்து சென்ற டாடா சுமோ வேன் ஒட்டன்சத்திரம் அருகே விபத்துக்குள்ளானதில் எஸ். ஐ., உ ள்பட 6 பேர் இறந்தனர்.
அருப்புக்கோட்டை அருகே உள்ள ஆத்திப்பட்டியைச் சேர்ந்தவர் வேலுச்சாமி (55). இவரது மனைவி சுப்புராணி (35). சுப்புராணியை அதே ஊரைச் சேர்ந்தமாரிச்சாமி (40) என்பவர் கோவைக்கு கடத்தி வந்து விட்டார்.
இது தொடர்பாக வேலுச்சாமி, ஆத்திப்பட்டி போலீசில், தனது மனைவியை மீட்டுத் தருமாறு புகார் கொடுத்தார். இந்தப் புகாரின் பேரில் போலீசார்வழக்குப் பதிவு செய்து அவரது மனைவியை மீட்க கோவைக்கு வந்தனர்.
இதில் எஸ். ஐ.பாண்டியன் (48), ஏட்டு கணேசன் (45), வேலுச்சாமி, அவரது நண்பர் கோவிந்தராஜ் ஆகியோர் உள்பட பலர் டாடா சுமோ வேனில்கோவைக்கு வந்தனர்.
கோவையில் தங்கியிருந்த மாரிச்சாமி, சுப்புராணி ஆகியோரை அழைத்துக் கொண்டு மீண்டும் அதே டாடாசுமோவில் அருப்புக் கோட்டை சென்றனர். டாடாசுமோ ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள கொசவபட்டி அருகே சென்று கொண்டிருந்தது.
அப்போது எதிரே மதுரையிலிருந்து கோவை வந்த பஸ்சுடன் மோதியது. இதில், டாடா சுமோவில் பயணம் செய்து கொண்டிருந்த வேலுச்சாமி, அவரதுமனைவி சுப்புராணி, சுப்புராணியைக் கடத்திச் சென்ற மாரிச்சாமி, சப் இன்ஸ்பெக்டர் பாண்டியன், ஏட்டு கணேசன், டிரைவர் கோபால் (30) ஆகிய 6 பேர் சம்பவஇடத்திலேயே உயிரிழந்தனர்.
வேலுச்சாமியின் உறவினர் கோவிந்தராஜ் மற்றும் கனகராஜ் ஆகியோர் காயமடைந்தனர். இவர்கள் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றனர்.












Click it and Unblock the Notifications