வீடு வீடாக நோட்டீஸ் தருகிறது பா.ஜ.க.

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பிரதமர் வாஜ்பாய் அரசின் சாதனை, நல்லாட்சியை விளக்க தமிழகம் முழுவதும் வீடு வீடாக துண்டுப் பிரசுரம்விநியோகித்து பிரசாரம் நடத்த தமிழக பாரதீய ஜனதாக் கட்சி முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக கட்சியின் பொதுச் செயலாளர் இல.கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கை:

போலியான ஒரு நிறுவனம் பேரில், போலியான ஆயுத பேரம் நடத்தி அதன் மூலம் ஊழலை வெளிப்படுத்திவிட்டதாக இன்டர்நெட் நிறுவனம் ஒன்று கூறியுள்ளது. இதற்காக சிலர் தெருவில் இறங்கி போராட்டம்நடத்துகிறார்கள்.

அறிவுப்பூர்வமாக, ஆதராப்பூர்வமாக பேசுவதற்காகவே அவர்களை மக்கள் எம்.பிக்களாக தேர்வு செய்துநாடாளுமன்றத்திற்கு அனுப்பினார்கள். ஆனால் அப்படிச் செய்யாமல் தெருவில் இறங்கிப் போராட்டம்நடத்துகிறார்கள். இவர்களை வாக்காளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

மக்களை சந்தித்து இந்தப் பிரச்சினையில் எங்கள் நிலை என்ன என்பதை விளக்கத் தயாராக உள்ளோம். அதன்அடிப்படையில், 24-ம் தேதி துவங்கி தமிழகம் முழுவதும் தெருனைப் பிரச்சாரங்கள், பொதுக் கூட்டங்கள், வீடுவீடாக துண்டுப் பிரசுரம் விநியோகிப்பது ஆகியவற்றின் மூலம் நமது நிலையை விளக்கும்பணியை பா.ஜ.க.தொண்டர்கள் மேற்கொள்வர்.

இதுபோன்ற பணியின்போது, பிற கட்சி அலுவலகங்களின் முன்பு மறியல், ஆர்ப்பாட்டம் போன்றவற்றைநடத்தாமல் பா.ஜ.க.வினர் அறிவுப்பூர்வமாக செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார் கணேசன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+