தோட்டத்தில் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்
Subscribe to Oneindia Tamil
பழனி:
திண்டுக்கல் அருகே முள் புதரில் பதுக்கி வைத்திருந்த 77 நாட்டு வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டன.
திண்டுக்கல் அருகே செம்பட்டி என்ற கிராமம் உள்ளது. இங்குள்ள பெருமாள் தோட்டம் என்ற இடத்தில்வெடிகுண்டுகள் இருப்பதாகப் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது.
இந்த தகவலையடுத்து போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு முள் புதரில் ஒரு சாக்குப்பைகளுக்கு இடையே 77 நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.
மேலும், இதில் கள்ளத்துப்பாக்கி ஒன்றும், இரண்டரை அடி நீளமுள்ள பைப் ஒன்றும் கண்டு பிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications