கடலூரில் அடையாள அட்டை வழங்கும் பணி தொடங்கியது
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் புகைப்பட அடையாள அட்டை வழங்கும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இதுவரும் மார்ச் 31 ம் தேதிக்குள் முடிவடையும் என்று கடலூர் மாவட்டக் கலெக்டர் சந்தீப் சக்சேனா தெரிவித்தார்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் செயல்படும் விதம் குறித்து நிருபர்களிடம் விளக்கிய அவர் மேலும்கூறியதாவது:
கடலூர் மாவட்டத்தில் புகைப்பட அடையாள அட்டை வழங்கும் பணி தொடங்கி விட்டது. அடையாள அட்டைவழங்கும் பணியில் பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
கடலூர் மாவட்டத்துக்கு இதுவரை 250 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வந்து விட்டன. மேலும் 2020வாக்குச்சாவடிகளில் உபயோகப்படுத்துவதற்காக இன்னும் பல மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்வரவுள்ளன.
அரசியல் கட்சித் தலைவர்கள், வாக்குச்சாவடியில் வேலை செய்யவுள்ள ஊழியர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவுஇயந்திரங்கள் செயல்படும் விதம் குறித்து புதன்கிழமை விளக்கிக் கூறப்படும்.
அதற்குப்பின் கடலூர் மாவட்டத்திலுள்ள கிராம மக்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை உபயோகித்துவாக்களிப்பது எப்படி என்பது குறித்து விளக்கிக் கூறத் திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு கடலூர் மாவட்டக் கலெக்டர் சந்தீப் சக்ஸேனா கூறினார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications