கொலை முயற்சி: தே.பா.சட்டத்தின் கீழ் மூவர் கைது
Subscribe to Oneindia Tamil
கோவை:
கொலை செய்யும் முற்சியில் ஈடுபட்ட 3 பேரைப் போலீசார் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் கைதுசெய்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை ஆத்துப் பாலம் பகுதியில் ஒரு இளைஞரை அல் உம்மா இயக்கத்தைச்சேர்ந்த சிலர் கொலை செய்ய முயன்றாதாகக் கூறப்படுகிறது.
முகமது யூனூஸ் என்ற அவர், அல் உம்மா இயக்கத்தைப் பற்றி போலீசாருக்கு ரகசியத் தகவல்கள் கொடுத்தாகக்கூறப்படுகிறது. இதையடுத்து அவரைத் தீர்த்துக் கட்ட 3 சிலர் முயன்று கத்தியால் குத்தியுள்ளனர். இதில் அவர்உயிர் தப்பினார். இந்நிலையில், அவரைக் கத்தியால் குத்தியதாக முகமது தாகா, சம்சுதீன், ஜாபர் சாதீக்ஆகியோரைப் போலீசார் கைது செய்தனர்.
இவர்களை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அடைக்க கோவை மாநகரப் போலீஸ் கமிஷனர் ராதாகிருஷ்ணன்உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications