சேரியிலிருந்து லண்டனுக்கு ... ஒரு சிறுமியின் பயணம்
ஆசியாவிலேயே மிகப் பெரிய சேரி மும்பை தாராவி குடிசைப் பகுதி. இங்கே ஒரு மிகப் பெரிய கனவும்நினைவாகியிருக்கிறது.
இந்தப் பகுதியில் வசித்து வரும் ராஜேஸ்வரி என்ற தமிழ் மாணவி பிரிட்டானியா நிறுவனம் நடத்திய போட்டியில்வென்று லண்டன் செல்ல இருக்கிறாள்.
மனசெல்லாம் பட்டாம்பூச்சிகள் சிறகடிக்க, இங்கிலாந்து செல்லும் நாளை எண்ணிக் கொண்டிருக்கிறாள் இவள்.
14 வயதாகும் இந்த ராஜேஸ்வரி பிரிட்டானியா பிஸ்கெட் நிறுவனம் நடத்திய போட்டியில் கலந்து கொண்டாள்.பிரிட்டானியா பிஸ்கெட் குறித்த மிகச் சிறந்த வார்த்தையை (ஸ்லோகன்) சொல்லும் பள்ளி மாணவ-மாணவிக்குலண்டன் இலவச பயணம் என்பது தான் அந்தப் போட்டி.
அந்தப் போட்டியில் கலந்து கொண்டு, பிரிட்டானியா குறித்து அருமையான கோஷம் ஒன்றைக் கூறி பலரைவியக்க வைத்து விட்டாள் ராஜேஸ்வரி.
ராஜேஸ்வரியின் அப்பா விஜயன் ஒரு பூ வியாபாரி. அம்மா குணசுந்தரி. சொற்ப வருமானத்தில் வாழ்க்கையைஓட்டும் குடும்பம். ஆனால், ஏழ்மைையை மீறி துறுதுறுவென்று இருக்கிறாள் ராஜேஸ்வரி. இந்தி, மராட்டிமொழிகளையும் பிளந்து கட்டுகிறாள்.
முதலில் பிரிட்டானியா நிறுவனம் நடத்திய போட்டியில் கலந்து கொண்டு ஸ்லோகன் சொன்ன எனக்கு லண்டனுக்குஇலவச டிக்கெட் கிடைத்திருக்கிறது என்று தெரியாது என்கிறாள்.
என் உடன் பயிலும் மாணவிகள் அனைவரும் என்னை கிண்டல் பண்ணுவதாக நினைத்துக் கொண்டேன். என்னைஏமாற்றப் பார்க்கிறார்கள் (மும்பை பாஷையில் போபட் பனாயா செய்ய பார்க்கிறார்கள்) என்று நினைத்தேன்.ஆனால் உண்மை என்று தெரிந்தவுடன் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
வகுப்பில் பாடம் நடந்து கொண்டிருந்தபோது திடீர் என்று எங்கள் வகுப்பு ஆசிரியை கங்கா நான் பிரிட்டானியாநிறுவனம் நடத்திய போட்டியில் வெற்றி பெற்றதாகவும், லண்டனுக்கு செல்ல இலவச டிக்கெட்கிடைத்திருப்பதாகவும் சொன்னார். ஒரு நிமிஷம் என்னால என்னையே நம்ப முடியல. என்னை சுத்தி என்னநடக்கிறது என்றே புரியவில்லை.
இது ஜோக்காகத்தான் இருக்கும் என்று நினைத்துக் கொண்டேன். கங்கா மேடம்தான் என் பெற்றோர்கள் கிட்டசொன்னாங்க. இன்னமும் இதை என்னால் நம்ப முடியல என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கைக்கு அளித்தபேட்டியில் கூறியுள்ளார்.
பிரிட்டானியா நிறுவனம் நடத்திய ஸ்லோகன் போட்டியில் 600 க்கும் மேற்பட்ட பள்ளிக் குழந்தைகள் கலந்துகொண்டனர். அனைவரையும் வென்றுள்ளார் ராஜேஸ்வரி.
ராஜேஸ்வரியை வெற்றி பெற வைத்த அந்த வார்த்தை (ஸ்லோகன்) குறித்த தகவல்கள் எதுவும்வெளியிடப்படவில்லை.
இந்த கடைசி போட்டியை எட்டுவதற்கு முன் பிரிட்டானியா நிறுவனம் நடத்திய வினாடி வினா போட்டி, ஓவியம்வரைதல் மற்றும் தொலைக்காட்சியில் பிரிட்டானியா நிறுவன விளம்பரத்தை அடையாளம் கண்டுபிடித்தல் ஆகியதேர்வுகளிலும் கலந்து கொண்டு வென்றுள்ளார் ராஜேஸ்வரி. இறுதி வெற்றியும் பெற்று லண்டன் செல்லும் இலவசடிக்கெட்டையும் வென்றார்.
இப்போது ராஜேஸ்வரியின் அப்பாவும் தன் மகளுடன் லண்டன் செல்லும் கனவுகளில் மூழ்கி விட்டார். லண்டன்மேப்பும் கையுமாகத் திரிகிறாள் ராஜேஸ்வரி.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications