"சிதம்பர" ரகசியம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

த.மா.கா. ஜனநாயக பேரவை-திமுக தேர்தல் இடையே ஏற்பட்ட தேர்தல் உடன்பாடு நிறுத்தி வைக்கப்பட்டதற்கு பல்வேறு காரணங்கள்கூறப்படுகின்றன.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, அதிமுகவுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தார் சிதம்பரம். தனது எதிர்ப்பை நேரடியாக வெளிப்படுத்தத.மா.கா.வில் இருந்து கொண்டே த.மா.கா.ஜனநாயக பேரவை தொடங்கினார்.

அதோடு திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து திமுகவிற்கு ஆதரவாக பிரசாரம் செய்யப் போவதாக அறிவித்தார். கருணாநிதியை சந்தித்த பின் அளித்தபேட்டியில் தனது நண்பர்கள் சிலர் தேர்தலில் போட்டியிட விரும்புகின்றனர். வாய்ப்பு இருந்தால் போட்டி இடுவார்கள் என கூறி இருந்தார்.

த.மா.கா.வில் தலைவர் இருக்கிறார். ஆனால், தலைமை இல்லை என குற்றம் சாட்டி தனி அமைப்பு துவங்கிய சிதம்பரத்திற்கு தற்போது அவரதுஆதரவாளர்களால் பிரச்சனை ஏற்பட்டு உள்ளது.

ஏனெனில், அவரை கலந்து ஆலோசிக்காமலேயே திமுகவுடன் தேர்தல் உடன்பாட்டில் கையெழுத்திட்டு இருக்கிறார் சிதம்பரத்தின் தீவிரஆதரவாளரான புரசைவாக்கம் தொகுதி எம்.எல்.ஏ. ரங்கநாதன்.

த.மா.கா. பேரவையின் தலைவராக உள்ள சிதம்பரத்திடம் தொகுதி உடன்பாடு குறித்து எதுவும் பேசப்பட வில்லை.

திமுக தலைமை-ரங்கநாதன் இடையே ஏறபட்ட உடன்பாட்டின்படி த.மா.கா. ஜனநாயக பேரவை 3 தொகுதிகளில் திமுக சின்னத்தில் போட்டியிடும்என்ற அறிவிப்பு வெளியானது.

இது பற்றிய தகவல்கள் வெளிவந்தவுடன் ரங்கநாதனை அழைத்த சிதம்பரம் கடுமையாக திட்டியுள்ளார். அதோடு திமுக தலைமை வெளியிட்டஅறிவிப்பை உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும் என்று ரங்கநாதனுக்கு உத்தரவிட்டார்.

திமுக தலைமையிடம் கெஞ்சி கூத்தாடி த.மா.கா. ஜனநாயகப் பேரவையுடனான தேர்தல் உடன்பாடு நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியிடச்செய்தார் ரங்கநாதன்.

த.மா.கா. ஜனநாயக பேரவை 2 மாதங்களுக்கு மட்டுமே செயல்படும் என அறிவித்து தான் ஆரம்பித்தார் சிதம்பரம். தேர்தல் முடிந்த உடன்அந்த அமைப்பை மீண்டும் த.மா.கா.வுடன் இணைக்க முடிவு செய்து இருந்தார்.

தனது ஆதரவாளர்கள் தேர்தலில் போட்டியிட விரும்பினால், சுயேட்சையாக போட்டியிட்டு கொள்ளலாம்.

அதைவிடுத்து திமுக திட்டப்படி திமுக சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றால் அந்த உறுப்பினர்கள் த.மா.கா.விற்கு திரும்ப முடியாது. எனவேதான் இந்த உடன்பாட்டை நிறுத்தி வைக்க கோரி உள்ளார் சிதம்பரம்.

ஆனால், திமுக தரப்பில் சிதம்பரத்தின் நடவடிக்கைக்கு வேறு காரணம் கூறப்படுகிறது. த.மா.காவில் தொகுதிக்கான வேட்பாளர்கள்அறிவிக்கப்பட்ட பின்னர் பல அதிருப்தியாளர்கள் சிதம்பரம் அணிக்கு வரக்கூடும்.

அப்போது தனிக்கட்சி ஒன்றை உருவாக்கி திமுக தலைமையிடம் அதிக தொகுதிகளை ஒதுக்க சிதம்பரம் கோருவார் என திமுக தரப்பினர்கூறுகின்றனர்.

த.மா.கா.வை தோற்கடிக்க வேண்டும் என்ற திமுகவின் நோக்கம் நிறைவேற திமுக தலைமையும் கூடுதலாக தொகுதிகள் ஒதுக்கஒத்துக்கொள்ளும் என்றும் கூறப்படுகிறது.

ஆனால், திமுக சின்னத்தில் தனது ஆதரவாளர்கள் போட்டியிட்டால் அதுவே தன்னையும் தனது ஆதரவாளர்களையும் த.மா.கா.வில் இருந்து நீக்ககாரணமாகி விடும் என்றும் சிதம்பரம் கருதுகிறார்.

60 நாட்களுக்காக தனி அமைப்பு தொடங்கியவர் தனி அலுவலகம் திறக்கிறார். நுங்கம்பாக்கம், வால்ஸ் சாலையில் தனது அமைப்பிற்கான புதியஅலுவலகத்தை புதன்கிழமை திறக்கிறார் சிதம்பரம்.

அன்றைய தினம் சென்னையில் கூடும் த.மா.காவின் செயற்குழு சிதம்பரத்தை கட்சியில் இருந்து நீக்கினால், இந்த அலுவலகம் நிரந்தரமாகசெயல்படலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+