புலிகள் தாக்கி 11 கடற்படை வீரர்கள் சாவு
கொழும்பு:
இலங்கையில் புதன்கிழமை அதிகாலை கடற்படை வீரர்கள் மீது விடுதலைப்புலிகள் தாக்குதல் நடத்தியதில் 11 கடற்படை வீரர்கள் உயிரிழந்தனர்.
7 க்கும் மேற்பட்ட கடற்படை வீரர்கள் காயமடைந்தனர்.
இந்தச் சம்பவம் விடுதலைப்புலிகள் நீட்டித்துள்ள சண்டை நிறுத்தம் இன்னும் இரண்டு நாட்களில் முடிவடைய உள்ள நிலையில் நடந்துள்ளது.
இதுகுறித்து இலங்கை ராணுவ செய்தித்தொடர்பாளர் சனத் கருணாரத்னே கூறியதாவது:
முல்லைத்தீவு அருகே கடலில், கடற்படை வீரர்கள், படகு மூலம் வழக்கமான ரோந்துப் பணிக்குச் சென்று கொண்டிருந்தனர். அவர்களது படகுதிரிகோணமலை துறைமுகம் அருகே வந்து கொண்டிருந்தது.
அப்போது புலிகள் எதிர்திசையில் 8 படகுகளில் வந்தனர். அவற்றில் ஒரு படகில் மட்டும் ஆயுதங்கள், வெடி மருந்துகள் வைக்கப்பட்டிருந்ததாகத்தெரிகிறது.
கடற்படை வீரர்கள் வந்த படகைப் பார்த்ததும் புலிகள் தங்கள் படகுகளில் இருந்து கொண்டு தாக்குதல் நடத்தினார்கள். இதில் 11 கடற்படை வீரர்கள்சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
விடுதலைப்புலிகள் அறிவித்துள்ள சண்டை நிறுத்த நீட்டிப்பு வரும் 24 ம் தேதி முடிவடைகிறது. ஏற்கனவே டிசம்பர் 24 ம் தேதி புலிகள் சண்டை நிறுத்தத்தைஅறிவித்திருந்தனர். இரண்டு முறை புலிகள் சண்டை நிறுத்தத்தை நீட்டித்துள்ளனர்.
புலிகளின் சண்டை நிறுத்தம் அமலில் இருக்கும் இவ்வேளையில் புலிகள் நடத்தியுள்ள மிகப்பெரிய தாக்குதல் இதுதான்.
இதே போல் கடந்த அக்டோபர் 23 ம் தேதி திரிகோணமலை பகுதியில் கடற்புலிகளின் தற்கொலைப் படையினர், கடற்படை வீரர்களின் இரண்டுபடகுகளை தாக்கினர்.
திரிகோணமலைப் பகுதியில் வேறு ஒரு இடத்தில் விடுதலைப்புலிகள் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் போது, கடற்புலிகள், கடற்படை வீரர்களின் இரண்டுபடகுகளை தகர்த்தனர் என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications