சென்னை மாணவர்கள் மும்பையில் மீட்பு
சென்னை:
சென்னையில் காணாமல் போன 3 மாணவர்கள் மும்பையில் மீட்கப்பட்டனர்.
சென்னை சூளை மேட்டுப் பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் ஷஷாங், விஜயகுமார், சுரேஷ் குமார் ஆகிய 3 பேரும் திங்கள்கிழமை மாலையிலிருந்து திடீரெனகாணவில்லை.
இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர் சூளைமேடு போலீஸில் புகார் கொடுத்தனர்.சூளைமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரங்கராஜன் வழக்குப் பதிவு செய்துமாணவர்களைத் தேட தனிப்படை அமைத்தார்.
இந்தப் படையினர் டெல்லிக்குச் சென்று தேடுதல் வேட் டையில் ஈடுபட்டனர். இந்த நிலையில், 3 மாணவர்களும் மும்பையில் மீட்கப்பட்டுள்ளதாகசூளைமேடு போலீஸார் தெரிவித்தனர்.
இதுகுறித்த விவரமாவது:
3 மாணவர்களும் 8-ம் வகுப்பு படித்து வருகின்றனர். இவர்களுக்கு பரிட்சை வரவுள்ளது. ஆனால் சரியாகப் படிக்காததால் வருத்தமடைந்த 3 பேரும்வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்தனர்.
திங்கள்கிழமை மாலை வீட்டுக்கு வந்ததும், விளையாடப் போவதாக வீட்டில் கூறி விட்டு சென்டிரல் ரயில் நிலையத்திற்கு வந்தனர். அங்கு அப்போதுமும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் நின்று கொண்டிருந்தது. 3 பேரும் அதில் ஏறினர்.
ரயில் புதன்கிழமை மும்பை விக்டோரியா ரயில் நிலையத்திற்கு வந்தது. அங்கு இறங்கியதும் எங்கு செல்வது என மாணவர்களுக்குத் தெரியவில்லை.
ரயில்வே பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்த போது தமிழகத்தைச் சேர்ந்தவரான அக்பர் என்பவர் மாணவர்களை அணுகி விசாரித்துள்ளார். அப்போதுநடந்த விவரம் தெரிய வந்தது.
இதையடுத்து அவர்களை விக்டோரியா ரயில் நிலைய போலீஸாரிடம் அக்பர் ஒப்படைத்து விட்டுச் சென்றார். மும்பை போலீஸார் இதுகுறித்து சூளைமேடுபோலீஸாரைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர்.
மாணவர்கள் மீட்கப்பட்ட விவரம் அவர்களது பெற்றோருக்கும் தெரியப்படுத்தப்பட்டது.தற்போது தங்களது பிள்ளைகளை அழைத்து வருவதற்காக 3மாணவர்களின் பெற்றோர்களும் மும்பை புறப்பட்டுச் சென்றுள்ளனர்.












Click it and Unblock the Notifications