வாஜ்பாய் அரசு பதவி விலக வேண்டும்: திராவிடர் கழகம்
மதுரை:
ஆயுத பேர ஊழல் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ள வாஜ்பாய் அரசு பதவி விலக வேண்டும் என திராவிடர்கழக பொதுச் செயலாளர் கி. வீரமணி கூறியுள்ளார்.
தெஹல்கா டாட் காம் என்ற இன்டர்நெட் நிறுவனம் பல அரசியல் தலைவர்களும், ராணுவ அதிகாரிகளும் ஆயுதபேர ஊழலில் ஈடுபட்டதாக வீடியோ பட ஆதாரத்துடன் குற்றம் சாட்டியது. இதையடுத்து வாஜ்பாய் அரசு பதவிவிலக வேண்டும் என எதிர்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.
வாஜ்பாய் அரசு பதவி விலக வேண்டும் என கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் (மார்க்சிஸ்ட்) மதுரையில்ஏற்பாடு செய்திருந்த போராட்டத்தில் கலந்து கொண்டு வீரமணி பேசியதாவது:
நாட்டின் இறையாண்மையும், பாதுகாப்பும் பாதுகாக்கப்பட வேண்டுமானால் வாஜ்பாய் அரசு பதவிவிலகவேண்டும். வாஜ்பாய் அரசு விரைவில் பதவி விலகுவது நாட்டிற்கு நல்லது.
வாஜ்பாயை பதவி விலகக் கோரி எதிர் கட்சிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடும் என்றார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications