அமைச்சரின் பிறந்த தேதி மோசடி
சென்னை:
தமிழக அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மீது போலியான பிறந்த தேதி கொடுத்து தேர்தலில் போட்டியிட்டதாக அதிமுக ஆதாரங்களுடன் குற்றம் சாட்டிஉள்ளது.
தமிழக அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் பிறந்த தேதி ஒவ்வொரு முறை தேர்தலில் நிற்கும் போதும் மாறி விடும் போல் இருக்கிறது.
கடந்த 1956ம் ஆண்டு முதல் திமுக உறுப்பினராக உள்ள வீரபாண்டி ஆறுமுகம் 1962ம் தேர்தலில் போட்டியிட்டு திமுக எம்.எல்.ஏ. ஆனார்.
அப்போது வெளியிடப்பட்ட சட்டசபை உறுப்பினர்கள் வாழ்க்கை குறிப்பேட்டில் அவருடைய பிறந்த தேதி 20.01.1934 என குறிப்பிடப்பட்டு உள்ளது.
அடுத்து 1965ம் ஆண்டு தேர்தலுக்குப்பின் வெளியிடப்பட்ட சட்டசபை உறுப்பினர் வாழ்க்கை குறிப்பேட்டில் அவருடைய பிறந்த தேதி 21.06.1935 எனகுறிக்கப்பட்டு உள்ளது.
1996ம் ஆண்டு தேர்தலுக்குப் பின் வெளியிடப்பட்டு உள்ள குறிப்பேட்டில் அவருடைய பிறந்த தேதி 20.01.1939. இந்த பிறந்த தேதிகள் அனைத்தும்அமைச்சர் தந்தவையே.
கடைசியாக கொடுத்துள்ள பிறந்த தேதிப்படி 1962ம் ஆண்டு தேர்தலின் போது அவருடை வயது 23மட்டுமே.
ஆனால், தேர்தலில் போட்டியிட 28வயது நிறைவு பெற்று இருக்க வேண்டும் என்பது தேர்தல் விதி.
இதனால், போலியான வயதை தெரிவித்து தேர்தலில் போட்டியிட்டு உள்ளார் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம். எனவே, இதற்கு பொறுப்பேற்று அமைச்சர்பதவி விலக வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார் சென்னை மாநகராட்சியின் அதிமுக உறுப்பினர் கராத்தே தியாகராஜன்.












Click it and Unblock the Notifications