இலங்கை கடற்படை சுட்டு அ.தி.மு.க. மீனவர் பலி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

இலங்கை கடற்படை வீரர்ரகள் கண்மூடித்தனமாக சுட்டத்தில் அ.தி.மு.கவைச் சேர்ந்தமீனவர் ஒருவர் கொல்லப்பட்டார். 4 பேர் படுகாயமடைந்துள்ளனர் என அ.தி.மு.க.பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இது குறித்து சென்னையில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மார்ச் மாதம் 17-ம்தேதி நாகப்பட்டினம் கடற்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த அ.தி.மு.கவைச்சேர்ந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்படை வீரர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடுநடத்தினர்.

இதில் தட்சிணா மூர்த்தி என்பவர் அந்த இடத்திலேயே இறந்து போனார். ஏகமூர்த்தி,சந்திரசேகரன், நாகலிங்கம் மற்றும் கலியபெருமாள் ஆகிய 4 பேர்படுகாயமடைந்தனர்.

கருணாநிதி அரசுடன் சேர்ந்து இந்திய கடலோர காவற்படை வீரர்களும் பாரபட்சமாகநடந்து கொள்கிறார்கள்.

இந்திய கடலோர காவற்படை வீரர்களின் கண்காணிப்புப்பணி திருப்தி அளிக்கும்விதமாக இல்லை. இந்திய மீனவர்கள் கடற் பகுதியில் கொல்லப்படுவது தொடர்ந்துநடந்து வருகிறது.

செவ்வாய்க்கிழமை இலங்கை தூதரகம் முன்பு தி.மு.க. இளைஞரணித் தலைவர்ஸ்டாலின் நடத்திய போராட்டம் தேர்தலை கருத்தில் கொண்டு மக்களை திசைதிருப்பும் நோக்கத்துடன் நடத்தப்பட்டது என்று கூறியுள்ளார்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+