யார் யாருக்கு எந்தெந்த தொகுதி - பேச்சு துவக்கியது தி.மு.க.
சென்னை:
தமிழகத்தில் ஆளும் தி.மு.க. தலைமையிலான தே.ஜ.கூட்டணியில் அங்கம் வகிக்கும்கூட்டணிக் கட்சிகளுக்கு தேர்தலில் போட்டியிடும் தொகுதிகளை அடையாளம்காணும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.
இது குறித்து தமிழக முதல்வரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதிசெய்தியாளர்களிடம் கூறுகையில், புதிய தமிழகத்துக்கு 10 தொகுதிகள்ஒதுக்கப்பட்டிருந்தது.
இவற்றில் அவர்கள் போட்டியிட வேண்டிய 8 தொகுதிகள் அடையாளம்காணப்பட்டுள்ளன. மீதமுள்ள 2 தொகுதிகள் வெள்ளிக்கிழமை அடையாளம்காணப்படும்.
பேச்சுவார்த்தை முடிந்து வந்த புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசுவாமிநிருபர்களிடம் கூறுகையிைல் ,நாங்கள் போட்டியிடுவதற்கு ஒதுக்கப்பட்டுள்ளதொகுதிகள் எங்களுக்கு திருப்தி அளிக்கின்றன என்றார்.
புதிய தமிழகத்துக்கு தொகுதிகள் அடையாளம் பணி குறித்த கூட்டம் சுமார் 3 மணிநேரத்திற்கு மேலாக நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த கூட்டத்தில் தமிழக கல்வி அமைச்சர் அன்பழகன், தேர்தல் பணிக்குழு தலைவர்ஆற்காடு வீராசாமி, சென்னை நகர மேயர் ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்றனர்.
தமிழகத்தில் தி.மு.க. சார்பில் போட்டியிட விண்ணப்பித்தவர்களை இன்டர்வியூசெய்யும் பணி இந்த மாதம் 29-ம் தேதி முடிவடைந்து விடும்.
பாண்டிச்சேரியில் போட்டியிடுவதற்காக விண்ணப்பித்தவர்களை இன்டர்வியூ செயுயம்பணி இந்த மாதம் 30-ம் தேதி துவங்கும் என வியாழக்கிழமை இரவு தி.மு.க.வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
.யு.என்.ஐ.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications