சிறையிலுள்ள அல் உம்மா தீவிரவாதிகளுக்கு கட்டுகட்டாய் பணம்
Subscribe to Oneindia Tamil
கோவை:
கோவை மத்திய சிறையில் ரூபாய் நோட்டுகள் கடத்தல் தொடர்பாக புலனாய்வுப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மத்திய சிறையில் அல் உம்மா பொதுச் செயலர் அன்சாரி உள்பட பலர் குண்டு வெடிப்பு வழக்கில் கைதாகி சிறையில் உள்ளனர். அன்சாரியைக் காணஅவரது மனைவி கடந்த சில தினங்களுக்கு முன்பு சந்தித்து பேசியுள்ளார்.
அப்போது அவரது அழுக்குத் துணிகளை வாங்கியுள்ளார். அந்த சமயத்தில் அந்த துணியிலிருந்து பணக் கட்டு ஒன்று தவறி விழுந்ததாகக் கூறப்படுகிறது.இதனை அங்கிருந்து உளவுப் பிரிவு போலீசார் கண்டறிந்துள்ளார். இதையடுத்து அவர் உயர் அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்துள்ளார்.
எனவே சிறைக்குள் எப்படி பணம் வந்தது, பணப் புழக்கம் உள்ளதா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications