பைபிள், குரான் எரிப்பு: ஆந்திரா, பஞ்சாபில் பதட்டம்
ஹைதராபாத்:
ஆந்திர மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் செவாலா டவுனில் உள்ள சர்ச்சில் நடந்து கொண்டிருந்த பிரார்த்தனைக்கூட்டத்தில் புகுந்த 16 பேர் கொண்ட கும்பல் ஒன்று பைபிளின் ஒரு பக்கத்தை எரித்தது.
பைபிள் எரிப்புச் சம்பவத்தில் தொடர்புடைய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்துப் போலீசார் கூறுகையில், செவாலா டவுன் டவுன் சர்ச்சில் வெள்ளிக்கிழமை பிரார்த்தனைக் கூட்டம்நடந்து கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று புகுந்து பைபிள் மேல் தீ வைத்தது. மேலும்சில பைபிள் பக்கங்களை கிழித்தெறிந்தது.
அங்கு ரோந்துப் போலீசார் வருவதைப் பார்த்த அக்கும்பல் அங்கிருந்து உடனடியாகத் தப்பித்தது. இதையடுத்துஅங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அமைச்சர் விரைந்தார்:
சம்பவம் கேள்விப்பட்டதும் மாநில காவல்துறை அமைச்சர் தேவேந்தர் கவுடா சம்பவ இடத்திற்கு விரைந்தார்.
அங்கு வன்முறைச் சம்பவம் எதுவும் ஏற்படவில்லை. அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
முதல்வர் கண்டனம்:
முதல்வர் சந்திரபாபு நாயுடு இந்தச் சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்ததுடன், தேசிய ஒருமைப்பாட்டைசீர்குலைக்கும் வகையில் யாரோ இச்செயலில் ஈடுபட்டுள்ளனர் என்று கூறியுள்ளார்.
குரான் பக்கங்கள் எரிப்பு?
பஞ்சாப் மாநிலம் அமிர்ஸ்தாரில் இந்து சுரக்ஷ சமிதியைச் சேர்ந்தவர்கள், மசூதியில் குரானின் பக்கங்களைபுதன்கிழமை எரித்தனர் என்றும் கூறப்படுகிறது.
அதே போல் பட்டியாலாவிலும் வியாழக்கிழமை குரான் எரிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. இதை போலீசார்மறுத்துள்ளனர்.
போலீசார் கூறுகையில், சில சமூக விரோதிகள் பாடப்புத்தகங்களைத்தான் எரித்துள்ளனர். மதப்புத்தகங்கள்எதையும் எரிக்கவில்லை. இருந்தாலும் சிலரைக் கைது செய்துள்ளோம் என்றனர்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications