காங்கிரசுக்கு தொழிலதிபர் நா.மகாலிங்கம் எச்சரிக்கை
கோவை:
பாரதிய ஜனதாக் கட்சியை, காங்கிரஸ் ஆதரிக்க வேண்டும் என தொழிலதிபர் நா.மகாலிங்கம் பேசினார்.
கோவையில் தொழிலதிபர் நா.மகாலிங்கத்தின் வாழ்க்கை வாழ்க்கை வரலாறு (ஏ லிவிங் லிஜென்ட்) என்ற நூல்வெளியிடப்பட்டது. இந்த நூல் வெளியீட்டு விழாவில், மகாலிங்கம் பேசியதாவது:
மக்கள் தொகையில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. பொருளாதாரத்தில் அமெரிக்கா முதலிடத்தில்உள்ளது. இதற்கு காரணம், அமெரிக்காவின் அரசியல் நிர்ணயச்சட்டம். ஒரு நாட்டின் தேவை அடிப்படையில்அரசியல் நிர்ணயச் சட்டம் அமைந்துள்ளது. மக்கள் தொகையில் முதலிடத்தில் உள்ள சீனாவிலும் கூட சரியானஅரசியல் சட்டம் சரியான அளவில் உள்ளது.
இந்திய அரசியல் சட்டம், பிரிட்டிஷ் அரசின் 1934ம் ஆண்டு அரசியல் நிர்ணயச் சட்டம் கிட்டத்தட்ட ஒன்றாகவேஉள்ளது. இதற்காக ஏன் இரண்டு ஆண்டுகள் செலவிடப் பட்டது என தெரியவில்லை. இந்திய அரசியல் சட்டம்உண்மையிலேயே மாற்றி அமைக்கப்பட வேண்டும்.
இதற்கான மறு ஆய்வுக் குழுத் தலைவர் வெங்கடாசலய்யாவைச் சந்தித்தபோது எம்.எல்.ஏ., க்களுக்கு 35 வயது.,எம்.பிக்கு 45 வயதும், மாநிலங்களவை உறுப்பினருக்கு 50 வயதும் என நிர்ணயிக்க வேண்டும் எனக் கருத்துதெரிவித்தேன்.
75 வயதிற்கு மேற்பட்டவர்கள் அரசியல் பதவிகளிலேயே இருக்கக் கூடாது எனத் தெரிவித்திருந்தேன். இணையதளம் ஒன்றில் வெளியான பரபரப்பான செய்தியால், நாடாளுமன்றே ஸ்தம்பிக்கின்ற நிலை உருவாகியுள்ளது.
முன்பு நரசிம்மராவ் ஆட்சி காலத்தில் இதே போன்ற பிரச்னை உருவானபோது காங்கிரசுக்கு பா.ஜ ஆதரவளித்தது.இதே போன்று பா.ஜ அரசு செயல்பட நாட்டின் நலன் கருதி காங்கிரஸ் ஆதரவளிக்க வேண்டும். தேவைப்பட்டால்ஆட்சியில் கூட காங்கிரஸ் பங்கு கொள்ளட்டும். நாட்டின் ஸ்திரத் தன்மையைச் சீர்குலைத்தால், எதிர்காலமேஅதனை சபிக்கும் என்றார் மகாலிங்கம்.
விழாவிற்குத் தலைமை தாங்கி நீதிபதி மோகன் பேசுகையில், இந்த நாட்டில் இப்போது பணம் வாங்குவது தவறுஎனச் சொல்லிக் கொண்டே மேசைக்கு அடியில் பணம் வாங்குகிறார்கள். அரசியிலில் சமரசம் சகிப்புத் தன்மைஎல்லாம் தேவை. இவை இல்லாததால் மகாலிங்கம் அரசியலை விட்டு விலகிவிட்டார் என்றார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் இன்று சந்திப்பு -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications