புலிகளின் சண்டை நிறுத்தம் நீட்டிப்பு
கொழும்பு:
இலங்கையில் தனி ஈழம் கேட்டுப் போராடி வரும் விடுதலைப்புலிகள் சண்டைநிறுத்தத்தை அடுத்த ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து புலிகள் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை:
இலங்கை இனப்பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையில் நாங்கள் டிசம்பர் மாதம் 24 ம் தேதி சண்டை நிறுத்தம் அறிவித்தோம். அது இரண்டு முறைநீட்டிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது முறை நீட்டிக்கப்பட்ட சண்டைநிறுத்தம் மார்ச் 24 ம் தேதி சனிக்கிழமையுடன் முடிவடைகிறது. இந்நிலையில் சண்டை நிறுத்தத்தை மீண்டும் ஒருமாதத்திற்கு நீட்டிக்கத் திட்டமிட்டுள்ளோம்.
அதாவது ஏப்ரல் 24 ம் தேதி வரை சண்டைநிறுத்தம் அமலில் இருக்கும். இலங்கையில் அமைதி ஏற்படுத்த நார்வே அதிக அளவு முயற்சி மேற்கொண்டுவருகிறது.
இரு தரப்பினரையும் அழைத்து நார்வே தூதுக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். நாங்கள் அமைதி ஏற்படுத்தும் வகையில், சண்டைநிறுத்தம்கடைபிடித்து வரும் இந்நேரத்தில் இலங்கை அரசு தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. விமானப்படை வீரர்கள், கடற்படை வீரர்கள் அனைவரும்தாக்குதலில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த முறை அரசு, எங்களது சண்டை நிறுத்த நீட்டிப்புக்குச் சாதகமான முறையில் தாக்குதலை நிறுத்த வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே, இலங்கை அரசு அதிகாரிகள் கூறுகையில், நாங்கள் அமைதிப்பேச்சுவார்த்தை தொடங்க அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறோம்என்று கூறியுள்ளனர்.
முன்னதாக, இலங்கை இனப்பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையில் நார்வே தூதுக்குழுத் தலைவர் எரிக்சோல்ஹெம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுவருகிறார்.
கடந்த 18 வருடமாக தனி ஈழம் கேட்டுப் போராடி வருகிறார்கள் புலிகள். இந்தப் போராட்டத்தில் இதுவரை 64,000 பேர் உயிரிழந்துள்ளனர்என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications