நாடாளுமன்றம் ஏப்ரல் 16-ம் தேதி வரை ஒத்திவைப்பு
டெல்லி:
நாடாளுமன்றம் அடுத்த மாதம் 16-ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது.
மார்ச் மாதம் 13-ம் தேதி தெஹல்கா டாட் காம் என்ற இன்டர் நெட் நிறுவனம் பலஅரசியல் தலைவர்களும், ராணுவ உயர் அதிகாரிகளும் ஆயுத பேர ஊழலில்ஈடுபட்டிருப்பாதகா வீடியோ பட ஆதாரங்களுடன் குற்றம் சாட்டியது.
இதையடுத்து பா.ஜ.க. தலைவர் பங்காரு லட்சுமணன், பாதுகாப்புத் துறை அமைச்சர்ஜார்ஜ் பெர்ணான்டஸ், சமதா கட்சி தலைவர் ஜெயா ஜேட்லி ஆகியோர் ராஜினாமாசெய்தனர்.
ஊழல் குற்றச்சாட்டு வந்ததும் திரினாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி தனதுரயில்வே அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். தன் கட்சி மத்தியதே.ஜ.கூட்டணிக்கு அளித்து வந்த ஆதரவையும் விலக்கி வந்தார்.
காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் ஆயுத பேர ஊழல் குற்ற்ச்சாட்டுக்கு பொறுப்பேற்றுவாஜ்பாய் அரசு பதவி விலக வேண்டும் என வற்புறுத்தி வந்தனர்.
இதனால் தொடர்ந்து நாடாளுமன்ற நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டு வந்தன.பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளித்ததும், ரயில்வே பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளித்தும்தவிர வேறு எந்த அலுவலும் நடைபெறவில்லை.
வெள்ளிக்கிழமை காலை அவை துவங்கியதும் எதிர் கட்சியினர் அவையின் மையப்பகுதிக்கு சென்று வாஜ்பாய் அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி, வாஜ்பாய் அரசுபதவி விலக வேண்டும் என ஆரப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து சபாநாயகர் பாலயோகி அவையை நண்பகல் 12.00 மணிக்கு ஒத்திவைத்தார் மீண்டும் அவை 12.00 மணிக்கு கூடிய போதும் எதிர் கட்சிகளின்ஆர்ப்பாடம் தொடர்ந்தது.
ஆனாலும் சுதந்திர போராட்ட வீரர்கள் பகத் சிங், சுக்தேவ் மற்றும் ராஜகுரு ஆகியோர்நாட்டுக்காக செய்த தியாகத்தின் 70-ம் ஆண்டை நினைவு கூர்ந்து அவர்களுக்குஅஞ்சலி செலுத்தப்பட்டது.
அதன்பின் மீண்டும் எதிர் கட்சியினர் ஆர்ப்பாட்டதில் ஈடுபட்டதும் சபாநாயகர்பாலயோகி அவையை ஏப்ரல் மாதம் 16-ம் தேதி வரை ஒத்தி வைத்தார்.
ராஜ்யசபாவிலும் இதே நிலைதான் நீடித்தது. ராஜ்யசபாவும் நண்பகல் 12.00 மணிவரை ஒத்தி வைக்கப்பட்டு மீண்டும் கூடியதும், சுதந்திர போராட்ட தியாகிகளுகுக்குஅஞ்சலி செலுத்தப்பட்டது. எதிர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் அவைத் தலைவர்கிருஷ்ணகாந்த் அவையை அடுத் மாதம் 16-ம் தேதி வரை ஒத்தி வைத்தார்.
யு.என்.ஐ.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications