திருப்பூரில் கோஷ்டி மோதல்: இருவர் கொலை
திருப்பூர்:
திருப்பூரில் நடந்த கோஷ்டி மோதலில் இரண்டு பேர் குத்திக் கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தில்தொடர்புடைய 7 பேர் கொண்ட கும்பலைப் போலீசார் தேடி வருகின்றனர்.
திருப்பூர் வடக்குப் பகுதியில் எம்.எஸ் நகரில் மார்ச் 22ம் தேதி நள்ளிரவில் கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இந்தமோதலில் மதுரையைச் சேர்ந்த 3 பேருக்கு கத்திக் குத்து விழுந்தது.
கத்தியால் குத்துப்பட்ட சுதாகர் (28), சேகர் (22) ஆகிய இருவரும் இறந்தனர். மேலும் முருகன் (25) என்பவர்காயமடைந்தார். இவர் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மதுரையிலிருந்து சேகர் மற்றும் அவரது அண்ணன் குமார் ஆகியோர் திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலைபார்த்து வந்துள்ளார். அப்போது குமாருக்கும் மற்றொருமொரு கோஷ்டிக்கும் இடையே வாய்த்தகராறுஏற்பட்டுள்ளது.
இதையடுத்து குமார், தனது தம்பி சேகரிடம் புகார் கூறியுள்ளார். சேகர், சுதாகர் மற்றும் முருகன் உள்பட நான்குபேரை அழைத்துக் கொண்டு அந்தக் கோஷ்டியினைத் தேடிச் சென்றது. ஏற்கனவே அந்த கோஷ்டி செல்வவிநாயகர் கோயில் அருகே உள்ள ஒரு டீ கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தனர்.
சேகர் மற்றும் அவரது நண்பர்கள் துரை என்பவரிடம் சென்று தனது அண்ணனுடன் நடந்த புகார் குறித்துவிசாரித்தனர். இதில் இரு தரப்பினருக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டு சண்டை ஏற்பட்டது.
இந்த சண்டையில் சுதாகர், சேகர், முருகன் ஆகியோருக்குக் கத்திக் குத்து விழுந்தது. இதில் இருவர் இறந்தனர்.முருகன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications