புலிகளுடன் எங்களுக்குத் தொடர்பில்லை: ராமதாஸ்
திருச்சி:
விடுதலைப் புலிகளுடன் எங்களுக்கு எந்த விதமான தொடர்பும் இல்லை என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனதலைவர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
காங்கிரசும், தமிழ் மாநில காங்கிரசும் இடம் பெற்றுள்ள அ.தி.மு.க. கூட்டணியில் நீங்களும் இருப்பதால் விடுதலைபுலிகள் ஆதரவு குறித்த உங்கள் நிலைப்பாடில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்பது உள்ளிட்ட நிருபர்களின் பலகேள்விக்களுககு பதிலளித்து ராமதாஸ் கூறியதாவது:
எங்களுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் எந்த விதமான தொடர்பும் கிடையாது. நான் இது வரை விடுதைலப்புலிகள் தலைவர் பிரபாகரணை பார்த்ததும் கிடையாது.
விடுதலைப் புலிகள் தமிழகத்தில் எந்த விதமான வன்முறையிலும் ஈடுபடக்கூடாது என்ற எங்கள் நிலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை.
வரவிருக்கும் சட்டசபை தேர்தலின் போது தி.மு.க. வேறு சில தீய சக்திகளுடன் சேர்ந்து சட்டம் ஒழுங்குபிரச்சனையை ஏற்படுத்தும். போலீசார் நியாயமான, நேர்மையான தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தீய சக்திகள் எவை என்பது குறித்து பா.ம,க. கட்சி பிரதிநிதிகள் முதல்வர் கருணாநிதியிடமும், ஆளுனர் பாத்திமாபீவியிடமு, பிரதமர் வாஜ்பாயிடமும், உள்துறை அமைச்சர் அத்வானியிடமும் சென்ற ஆண்டு நவம்பர் மாதமேகொடுத்துவிட்டனர்.
கட்சி பிரதிநிதிகள் தலைமை தேர்தல் ஆணையர் கில் சென்னை வரும் போது அவரை சந்தித்து இது குறித்து புதியஅறிக்கை ஒன்றை கொடுக்கவிருக்கிறார்கள்.
பாண்டிச்சேரியில் என்னை கொலை செய்ய முயன்றது தொடர்பாக இரண்டு பேரை கைது செய்தனர். அவர்கள்இப்போது தி.மு.கவில் உள்ளனர். இதே சம்பவத்தில் தொடர்புடைய ரவி என்பவரை இன்னும் கைதுசெய்யவில்லை.
ஆயுத பேர ஊழல் குற்றச்சாட்டுக்கு பொறுப்பேற்று வாஜ்பாய் அரசு பதவி விலக வேண்டும். மேலும் ஆயுத பேரஊழலில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எங்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள 27 தொகுதிகள் குறித்த பட்டியலை அ.தி.மு.க. தலைவர் ஜெயலலிதாவிடம்கொடுத்து விட்டோம். மதசார்பற்ற கூட்டணியில் உள்ள தலைவர்களுடன் விவாதித்த பின் இன்னும் இரண்டொருநாட்களில் எங்களுக்கான தொகுதிகள் முடிவு செய்யப்படும் என்றார்.
த.மா.கா மூத்த தலைவர்கள் பேட்டி:
சிதம்பரம் உயிர்தான் இங்கு உள்ளது. உடல் இன்னும் சத்திய மூர்த்தி பவனில் இருப்பதாக கூறியது குறித்துத.மா.கா. தலைவர்களில் ஒருவரான பாலசுப்ரமணியமும் வேறு சில தலைவர்களும் கூறுகையில் சிதம்பரத்தின் உயிர்பா.ஜ.க. உடலுடன் ஏற்கனவே கலந்து விட்டது.
எந்த அரசியல் கட்சியில் இருந்தாலும் உயிர் என்பது கட்சி தொண்டர்களிடம் தான் இருக்க வேண்டும்.சிதம்பரத்தை கட்சியிலிருந்து நீக்குவது என்ற முடிவப 55 மாவட்ட உறுப்பினர்களின் சம்மதம் பெற்ற பிறகு தான்எடுக்கப்பட்டது என்றனர்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications