ஜனாதிபதிக்கு உடல்நலக்குறைவு
டெல்லி:
ஜனாதிபதி கே.ஆர்.நாராயணனுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரது பித்தநீர்ப்பையில் உள்ள கற்களை அறுவை சிகிச்சை மூலம் நீக்க வேண்டும் என்றும், அதுவரை அவர் முழு ஓய்வில் இருக்க வேண்டும் என்றும்மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதனால், ஏப்ரல் அல்லது மே மாதத்தில் அயர்லாந்து மற்றும் கிரிஸ் செல்லத் திட்டமிட்டிருந்த அவர் தனது சுற்றுப்பயணத்தை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளார்.
இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சக செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
ஜனாதிபதி கே.ஆர்.நாராயணனுக்கு உடல்நலம் சரியில்லாத காரணத்தால் அவரது வெளிநாட்டு சுற்றுப்பயணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவேதிட்டமிட்டிருந்த படி அவரால் அயர்லாந்து மற்றும் கிரிஸ் நாடுகளுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஜனாதிபதி எப்போது வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என்பது அயர்லாந்து, கிரிஸ் நாடுகளுடன் கலந்தாலோசித்து விட்டு பின்னர்அறிவிக்கப்படும்.
மேலும் ஸ்லோவேனியன் அதிபர் ஏப்ரல் 2 ம் தேதி முதல் 6 ம் தேதி வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என்று ஏற்கனவேஅறிவிக்கப்பட்டிருந்தது. அதிலும் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்றார்.
ராஷ்டிரபதிபவன் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன் (80) அடுத்த இரண்டு நாட்கள் முழு ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். அவருக்கு பித்தநீர்ப்பையில்கற்கள் உருவாகியுள்ளது. அவர் அதற்கான சிகிச்சை எடுத்து வருகிறார்.
இதனால் அடுத்த இரண்டு நாட்களில் அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. சனிக்கிழமை ஜெய்ப்பூர் செல்லவிருந்தநிகழ்ச்சியும், புதன்கிழமை ஹைதராபாத் செல்லவிருந்த நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டுள்ளன என்று கூறப்பட்டுள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications