நாட்டை சீர்குலைக்க காங்கிரஸ் சதி: பாஜக புகார்
டெல்லி:
ஆயுதப் பேர ஊழல் வழக்கை காரணம் காட்டி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியைக் கலைக்கவும், நாட்டைத்சீர்குலைக்கவும் காங்கிரஸ் சதி செய்கிறது என்று பாஜக கூறியுள்ளது.
டெல்லியில் தொடங்கிய பாஜக வின் இரண்டு நாட்கள் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
இந்தியா இப்போது பொருளாதார நிலையில் மேம்பாடடைந்தும், தேசிய ஒருமைப்பாட்டைக் குலைக்கும் தீய சக்திகளிலிருந்து விடுபட்டுக் கொண்டுவருகிறது.
ஆனால் ஆயுதப் பேர ஊழல் வழக்கைக் காரணம் காட்டி நாட்டின் பொருளாதாரம், பாதுகாப்பு, ராணுவம், சமூக ஒற்றுமை ஆகியவற்றுக்குக்களங்கம் கற்பிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது காங்கிரஸ்.
இதை நாம் ஒருபோதும் ஊக்குவிக்கக் கூடாது. பொதுவாழ்க்கையில் இருப்பவர்கள் மிகவும் நல்லவர்களாக, அப்பழுக்கற்றவர்களாக இருக்க வேண்டும்.குறிப்பாக வாஜ்பாய் தலைமையிலான பாஜக வில் உள்ளவர்கள் ஊழல் வழக்குகளில் சிக்காமல் இருக்க வேண்டும்.
ஆயுதப் பேர ஊழல் குறித்து விசாரணை நடத்தப்படும். விசாரணை அறிக்கைகள் வந்தவுடன் ஊழல் செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள். ஆனால் பாஜகவில்உள்ள நேர்மையான ஒருவர் ஒருபோதும் தண்டிக்கப்படக் கூடாது.
ஆயுதப் பேர ஊழல் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தத் தயாராக இருக்கிறோம். ஆனால் காங்கிரசோ அதை நிராகரித்து விட்டு, வாஜ்பாய்அரசு பதவி விலக வேண்டும் என்று உறுதியாக நிற்கிறது.
மேற்கண்ட தீர்மானங்கள் உள்பட பல தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
தெஹல்கா டாட் காம் வெளிக்கொண்டு வந்த ஆயுதப் பேர ஊழலுக்குப் பிறகு, பாஜக கூட்டியுள்ள முதல் செயற்குழுக் கூட்டம் இது என்பதுகுறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
-
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications