பா.ஜ.க பேரணி: சந்திரபாபு நாயுடு புறக்கணிப்பு

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்:

ஆயுதப் பேர ஊழல் புகாரையொட்டி டெல்லியில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிஞாயிற்றுக்கிழமை நடத்திய பேரணியில் தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும், ஆந்திர மாநில முதல்வருமானசந்திரபாபு நாயுடு கலந்து கொள்ளவில்லை.

இதுகுறித்து சந்திரபாபு நாயுடு ஹைதராபாத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், பா.ஜ.க. அரசு மேல் ஆயுதப்பேர ஊழல் புகார் கூறப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

விசாரணை அறிக்கை வெளிவரும் வரை தெலுங்கு தேசம் கட்சி இதுகுறித்து கருத்து எதுவும் கூறாது. தற்போதுபா.ஜ.க அரசு நடத்தும் பேரணியில் கலந்து கொண்டால், அவர்களுக்கு தெலுங்கு தேசம் கட்சி ஆதரவு அளிப்பதுபோலவும், பா.ஜ.க. மேல் கூறப்பட்ட ஊழல் புகார் பொய் என்று தெலுங்கு தேசம் கட்சி நம்புவது போலவும் ஆகிவிடும்.

பா.ஜ.க நடத்தும் பேரணியில் கலந்து கொள்ளுமாறும், பேரணியை அடுத்து நடக்கும் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறும் பா.ஜ.க. அழைப்பு விடுத்திருந்தனர். இருப்பினும் இதை ஏற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலையில்தெலுங்கு தேசம் கட்சி உள்ளது.

ஊழலை மட்டும் தெலுங்கு தேசம் கட்சியால் ஒரு போதும் பொறுத்துக் கொள்ள முடியாது. இதுகுறித்துமுழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று மட்டும் தெலுங்கு தேசம் கட்சி விரும்புகிறது என்றார்.

முன்னதாக, தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வெளியிலிருந்து ஆதரவு அளித்து வரும் தெலுங்கு தேச கட்சிக்குநாடாளுமன்றத்தில் 29 எம்பிக்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+