அதிமுகவுக்கு ஆதரவாக குண்டு கல்யாணம் பிளிரல்
இது வரைக்கும் என்ன வரி போடாம இருக்காங்க. ஜனவரி, பிப்ரவரி மட்டும் தான்பாக்கி. அதுவும் கூட ஆண்டுக்கு ரெண்டு தடவ வருது, அதுவும் ஒரு வரியாகிவிடுமோ என்ற பயம் மக்களிடையே வந்து விட்டது என்கிறார் குண்டுக் கல்யாணம்.
வழக்கம்போல் அ.தி.மு.கவிற்கு ஆதரவாக தேர்தல் களத்தில் குதித்திருக்கிறார் குண்டுகல்யாணம்.
கோவையில் பிரசாரம் பிளிர்வதற்காக ஸாரி... செய்வதற்காக வந்திருந்த குண்டுகல்யாணம் கூறியதாவது:
எப்போதுமே நான் எம்.ஜி.ஆரின் ரசிகன். விசுவாசி. அதனால் தான் இன்னும் அவர்தொடங்கிய கட்சியில் இருந்து வருகிறேன். சின்ன வயசிலிருந்தே எம்.ஜி.ஆர்னாஎனக்கு உசிரு.
பள்ளியில் படிக்கும் போது எம்.ஜி.ஆர். பத்தி ஒருத்தன் கிண்டல் பண்ணினான். அவன்கன்னத்துல விட்டேன் பாரு ஒரு குத்து, அவனுக்கு பல்லு வெளியே வந்துவிழுந்திருச்சு.
இப்போ நான் கட்சிக்கு விசுவாசியா இருக்கிறத பார்த்துட்டு அம்மா (ஜெயலலிதா) கூடஎனக்கு நெறைய உதவியிருக்காங்க. என் குழந்தை மருத்துவமனையில இருந்தப்போ,ஒரு ஆபரேஷன் பண்ணினேன்.
நண்பர்களிடம் அக்கம் பக்கம் கடன் வாங்கி ஆபரேஷனை முடிச்சேன். இதகேள்விப்பட்ட அம்மா (ஜெயலலிதா) என்ன கூப்பிட்டு அனுப்பினாங்க. குழந்தைக்குஆபரேஷன் செஞ்சதை ஏன் சொல்லலைனு கேட்டாங்க. அப்புறம் கை நிறையகொடுத்து அனுப்பினாங்க. அசந்துட்டேன்.
ஜெயலலிதா ஊழல், ஊழல்னு தான் தி.மு.க.வினர் கத்துறாங்க, ஆனா, நான் நடந்துபோறேன், பஸ்ல போறேன், ரயில்ல போறேன், நெறைய மக்கள பார்க்கிறேன்.அப்போதெல்லாம் அம்மா தான் ஆட்சிக்கு வரணும்னு சொல்றாங்க. ஏன்சொல்றாங்க?
என்னக் கூடத் தான் ""டேய், குண்டா, போண்டா, தடியா, எட்டு இட்லிதிங்கறவனேன்னு திட்டுறங்க. ஆனா, நான் அதையெல்லாம் கேட்கிறேனா? அதைப்போல தான். யார் என்ன சொன்னாலும் அம்மா தான் முதல்வர்னு மக்கள்தீர்மானிச்சுட்டாங்க.
எஸ். எஸ் சந்திரன் அ.தி.மு.கவை ஆதரித்து பிரச்சாரம் போற பக்கமெல்லாம், அடிஉதைனு தான் விழுது. நான் கூட, மெட்ராசுல கோபால புரத்தில் ஒரு மீட்டிங்லபேசினேன். அப்போ கலைஞர் வீட்ல இருந்து கல், குவார்ட்டர், ஆப், புல் பாட்டில்எல்லாம் பறந்து வந்து விழுந்துச்சு. இதற்கெல்லாம் பயந்துட முடியுமா? நேர்ல வரச்சொல்லுங்க பார்க்கலாம். வந்தா, சட்னியாக்கிடுவேன்.
எலெக்ஷன்ல நான் போட்டியிடா விட்டாலும் கூட அம்மா அரியணை ஏறுவது தான்எனது லட்சியம். பதவிக்காக ஆசைப்படுவன் நான் அல்ல என்றார்.
நெற்றி நிறைய விபூதி சகிதமாக வந்திருந்த குண்டு கல்யாணம், அம்மா ஆட்சிக்குவரணும்னு பிரார்த்தனை பண்ணிக் கொண்டராம். கோவையில் நெறைய கோயில்கள்இருப்பது எனக்கு பிடிச்சுருக்கு என்றார்.












Click it and Unblock the Notifications