மீண்டும் வெடிக்கிறது பா.ம.க--- - விடுதலை சிறுத்தைகள் மோதல்
சென்னை:
பாட்டாளி மக்கள் கட்சியும், விடுதலை சிறுத்தைகள் அமைப்பும் மீண்டும் மோதலில்இறங்கியுள்ளன.
சமீபத்தில் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் காரைக்காலில்பொதுக்கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்த போது அவர் மீது கல்வீசி தாக்குதல்நடத்தப்பட்டது.
இதற்கு பா.ம.கவினர் தான் காரணம் என விடுதலை சிறுத்தைகள் குற்றம் சாட்டினர்.இதற்கு பதிலளித்து முன்னாள் மத்திய அமைச்சரும், பா.ம.கவின் பொதுசெயலாளருமான பொன்னுசாமி கூறியிருப்பதாவது:
திருமாவளவன் பங்கு பெற்ற கூட்டத்தில் கல் எறியப்பட்ட சம்பவத்திற்கும்எங்களுக்கும் எந்த விதமான சம்பந்தமும் கிடையாது. இது ஜாதிக் கலவரத்தை தூண்டிவிடும் நோக்கத்துடன் எம்.எல்.ஏ. ஒருவர் செய்த செயல்.
தொடர்ந்து எங்கள் மீது இது போல் தவறான குற்றச்சாட்டுகளை கூறி வந்தால் எல்லாமாவட்டங்களுக்கும் சென்று விடுதலை சிறுத்தைகளுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்திலும்,போராட்டத்தில் ஈடுபடுவோம்.
பல வன்முறைச் சம்பவங்களிலும் ஈடுபட்டு, பல வன்முறைச் சம்பவங்களுக்கும்காரணமான விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் மீது நடவடிக்கை எடுக்குமாறுநாங்கள் முதல்வரை பலமுறை கேட்டுக் கொண்டுள்ளோம். ஆனால், அதை முதல்வர்காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை.
எங்கள் கோரிக்கையை முதல்வர் நிராகரித்த முதல்வர் கருணாநிதி விடுதலைசிறுத்தைகளுடன் தேர்தல் கூட்டணி அமைத்துக் கொண்டுள்ளார் என்றார்.
பாட்டாளி மக்கள் கட்சி தொண்டர்களும், விடுதலை சிறுத்தைகள் அமைப்பின்தொண்டர்களும் கடந்த தேர்தலின் போதும் அதற்கு பின்னும் கூட மோதலில் ஈடுபட்டுவந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications