ம.மு.லீ.: தமிழகத்தில் மேலும் ஒரு கட்சி
சென்னை:
மறுமலர்ச்சி முஸ்லீம் லீக் என்ற புதிய அரசியல் கட்சி செவ்வாய்க்கிழமை சென்யிைல்உதயமாகியுள்ளது.
இந்த கட்சியை 1996ம் ஆண்டு முதல் சமூக அமைப்பாக நடத்தி இஸ்லாமிய தமிழர்பேரவை என்ற அமைப்பு துவக்கியுள்ளது.
புதிய கட்சியை துவங்கியது குறித்து மறுமலர்ச்சி முஸ்லீம் பேரவையின் நிறுவனத்தலைவர் உமர் பாரூக் நிருபர்களிடம் கூறுகையில், எங்கள் இயக்கம் முஸ்லீம் மக்களின்நலத்தை பாதுகாக்கும் நோக்கத்துடன் துவங்கப்பட்டுள்ளது.
வரவிருக்கும் தமிழக சட்டசபை தேர்தலில் நாங்கள் அ.தி.மு.க. தலைமையிலானமதசார்பற்ற கூட்டணியை ஆதரிக்கவுள்ளோம். ஆனால் நாங்கள் தேர்தலில்போட்டியிட மாட்டோம்.
நாங்கள்அனைத்து முஸ்லீம் கட்சிகளையும், முஸ்லீம் அமைப்புகளையும் இணைத்துஒரே இயக்கமாக்க வேண்டும் என முயன்றோம். அது இயலவில்லை. அதனால்தான்எங்கள் இயக்கத்தை கட்சியாக மாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
முஸ்லீம் கட்சிகளால் ஏற்பட்டுள்ள காலியிடத்தை நிரப்பி முஸ்லீம் மக்களுக்கு நன்மைசெய்வோம் என்றார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications