தங்க கட்டிகளை கொள்ளையடித்த போலீஸ்
கோவை:
கோவையில் போலீசார் போல நடித்து வியாபாரியிடம் ஒரு லட்சம் மதிப்புள்ள தங்க பிஸ்கட்டுகளைகொள்ளையடித்துச் சென்றவர்களை உண்மையான போலீசார் தேடி வருகின்றனர்.
கோவைக்கு சில தினங்களுக்கு முன்பு மகராஷ்டிராவைச் சேர்ந்த ராஜாராம் டி.பவார் (42) என்பவர் வந்தார். தங்கபிஸ்கட்டுகளைக் கொண்டு வந்த அவர், அவற்றை நகையாக மாற்றிச் செல்ல வேண்டும் என்று திட்டமிட்டிருந்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு ஒரு அறையில் தங்கி விட்டு காலையில் எழுந்து தங்கக் கட்டிகளைக் கொடுக்ககோவை இடையார் வீதிக்குச் சென்றார்.
அங்கு அப்போது தயாராக போலீஸ் உடையில் நான்கு பேர் நின்றிருந்தனர். அவர்கள், அவரிடம் தங்கபிஸ்கட்டுகள் எந்த அனுமதியில் எடுத்துச் செல்கிறீர்கள் என மிரட்டியுள்ளனர்.
பின்னர் அவற்றை பரிசோதனை செய்ய வேண்டும் எனக் கூறி, தங்க பிஸ்கட்டுகளைப் பறித்துக் கொண்டுதலைமறைவாகி விட்டனர்.
இது குறித்து உக்கடம் போலீசில் பவார் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து போலி போலீசாரைத்தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications