வங்கிக் கொள்ளையைத் தடுத்த பொது மக்கள்
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம், திருப்போரூர் அருகே உள்ள மாம்பாக்கத்தில் இருக்கும் ஆரம்ப விவசாயகூட்டுறவு வங்கியை கொள்ளையடிக்க முயன்ற கொள்ளையர்கள் முயற்சி அந்தகிராமத்தை சேர்ந்த மக்களால் முறியடிக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், கொள்ளையர்கள் வங்கியின் இரும்புகதவுகளை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்துள்ளனர்.
அவர்கள் பாதுகாப்பு பெட்டகத்தை உடைக்க முயன்ற போது, தவறுதலாக பாதுகாப்புஅலாரத்தில் கையை வைத்துவிட்டனர். அலாரத்தின் ஒலி கேட்டு கிராம மக்கள்வங்கியை நோக்கி ஓடி வந்தனர்.
கிராம மக்களை பார்த்ததும் கொள்ளையர்கள் தப்பி ஓடி விட்டனர்.
வங்கியில் பல லட்ச ரூபாயும் ரூ 65 லட்சம் மதிப்புள்ள நகைகளும் இருந்ததாகக்கூறப்படுகிறுது.
குற்றவாளிகளை தேடும் பணி நடந்து வருகிறது என்றனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications