நீங்கள் தான் துரோகி? சோனியா மீது பா.ஜ.க. தாக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தெஹல்கா டாட் காம் இன்டர் நெட் தளம் கூறிய ஆயுத பேர ஊழல் குற்றச்சாட்டைஅடிப்படையாக கொண்டு வாஜ்பாயை துரோகி என கூறிய காங்கிரஸ் கட்சி தலைவர்சோனியா காந்தியை, பா.ஜ.கவின் செயற் குழு உறுப்பினர் ராமராவ் கடுமையாகவிமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், ஆயுத பேர ஊழல் குறித்துஉண்மையை கொண்டு வருவதற்காக நீதி விசாரணை நடத்தப்படுவதை சோனியாகாந்தி எதிர்க்கிறார். இதன் மூலம் சட்ட, ஒழுங்கு பிரச்சனையை உண்டாக்க அவர்முயல்கிறார்.

நாடாளுமன்றத்தில் ஆயுத பேர ஊழல் குறித்த விவாத்தை நடத்தவும் சோனியா காந்திசம்மதிக்கவில்லை. இது நாடாளுமன்ற ஜனநாயகத்தை அவர் புரிந்து கொள்ளவில்லைஎன்பதையே காட்டுகிறது.

அதே சமயம் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் சட்டசபையில் ஆயுத பேர ஊழல் குறித்துவிசாரணை செய்ய வேண்டும் என கூறி வருவது காங்கிரஸ் கட்சி இரட்டை நிலைஎடுக்கிறது என்பதை காட்டுகிறது.

சோனியா காந்திதான் துரோகி. சோனியா காந்தியின் கணவரான ராஜீவ் காந்திபிரதமராக இருந்த போது பாதுகாப்பு துறையையும் கையாண்டு வந்தார். அப்போதுநடைபெற்ற ரூ 30 கோடி நீர்மூழ்கி கப்பல் ஊழல் விவகாரமும், ரூ 67 கோடி வரைபோபர்ஸ் பீரங்கி ஊழலும் வெளிச்சத்திற்கு கொண்டு வரப்பட்டன என்பதுகுறிப்பிடத்தக்கது.

தமிழக சட்டசபை தேர்தலிலும், திருச்சி மக்களவை தேர்தலிலும் போட்டியிடும்பா.ஜ.க.வேட்பாளர் பெயர்கள் மத்திய நாடாளுமன்ற குழுவின் ஒப்புதல் பெற்ற பின்இன்னும் 3 அல்லது 4 நாட்களில் அறிவிக்கப்படும் என்றார்.

யு.என்.ஐ.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+