வீரப்பன் கூட்டாளி மாறனுக்கு சிறைக் காவல் நீடிப்பு
காஞ்சிபுரம்:
கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்திலில் வீரப்பனுக்கு உடந்தையாக இருந்து கைதானதமிழ் தேசிய விடுதலை படையின் தலைவர் மாறனுக்கு நீதிமன்ற காவல்நீட்டிக்கப்பட்டுள்ளது.
அவரை ஏப்ரம் மாதம் 10ம் தேதி வரை காவலில் வைக்க செங்கல்பட்டு மாவட்டநீதிபதி உத்தரவிட்டார்.
தமிழ் தேசிய விடுதலை படையின் தலைவர் மாறன் மீது , 1996ம் ஆண்டு, ஏப்ரல் 22ம்தேதி, திண்டிவனத்திற்கு அருகே இருக்கும் பேரணி ரயில்வே ஸ்டேஷனில் வெடிகுண்டு வைத்தது தொடர்பான வழக்கு நடந்து வருகிறது.
மாறனும், அவரது இயக்க தோழர்களும் பேரணி ரயில்வே ஊழியர்களை அடித்துவிரட்டி விட்டு ரயில் தண்டவாளத்தில் குண்டுகளை வைத்து விட்டு அவை வெடிக்கும்முன் அந்த இடத்திலிருந்து தப்பி விட்டனர் என அரசு தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த செங்கல்பட்டு ரயில்வே போலீஸ், இந்த வழக்கை விழுப்புரம்காவல்நிலைத்திற்கு மாற்றியது.
இந்த குண்டு வெடிப்பு வழக்கில் மாறன் தேடப்பட்டு வந்தார். ஆனால், தலைமறைவாகஇருந்த அவர் ராஜ்குமார் விவகாரத்தில் பிரபலமானார். கடந்த மாதம் கோவையில்திடீரென கைது செய்யப்பட்டார்.
அன்றுமுதல் பூந்தமல்லி சிறப்பு ஜெயில் அடைக்கப்பட்டுள்ளார். ரயில் நிலையவெடிகுண்டு வழக்கு விசாரணை தொடர்பாக மாறன், கடும் பாதுகாப்புடன், வேன்மூலம் செங்கல்பட்டு நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டார்.
வழக்கை விசாரித்த நீதிபதி மாறனின் நீதிமன்ற காவலை அடுத்த மாதம் 10-ம் தேதிவரை நீடித்து தீர்ப்பளித்தார்.
மாறன் நீதிமன்றம் அழைத்து வரப்பட்டதையொட்டி நீதிமன்றத்திலும் காவல்பலப்படுத்தப்பட்டிருந்தது.
யு.என்.ஐ.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications