8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வென்றது ஆஸி.
புனே(மகராஷ்ட்ரா):
மார்க் வாஹ் மற்றும் மாத்யூ ஹேடனின் ஆட்டத்தால் புனே நகரில் நடைபெற்ற 2வது ஒரு நாள் போட்டியில் ஆஸி. அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இந்திய-ஆஸி. அணிகளுக்கு இடையே நடைபெற்றுவரும் ஒருநாள் போட்டி தொடரின் 2வது ஆட்டம் புனே நகரில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில்புதன்கிழமை நடைபெற்றது.
முதலில் ஆடிய இந்திய அணியில் ஹேமங்க் பதானி சதம் அடித்தார்(100 ரன்கள்). வி.வி.எஸ் லஷ்மண் (51 ரன்கள்), டெண்டுல்கர் (32 ரன்கள்) தவிரமற்றவர்கள் சிறப்பாக ஆடாததால் இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 248 ரன்களை மட்டுமே எடுத்தது.
இந்திய வீரர் பதானியின் தவறால் லஷ்மணும், தினேஷ் மோங்கியாவும் ரன் அவுட்டாகினர். இந்திய அணியினர் செய்யத் தவறியதை செய்து காட்டினர் ஆஸி.அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் மாத்யூ ஹேடனும்(57 ரன்கள்), மார்க் வாஹும்(133 ரன்கள்).
இந்த துவக்க ஜோடி 143 ரன்களை குவித்தது. பின்னர் வந்த லேமன் 1 ரன்னில் ரன் அவுட் ஆகிவிட்டார்.
3வது விக்கெட்டிற்கான மார்க் வாஹ்-மைக்கேல் பெவன் ஜோடியின் நிதானமாக ஆட்டத்தால் 46வது ஓவரில் 249 ரன்களை எடுத்து 8விக்கெட்வித்தியாசத்தில் ஆஸி. அணி வெற்றி பெற்றது.
இதனால், 5 போட்டிகள் கொண்ட இத்தொடரில் இரு அணிகளும் ஒரு போட்டியில் வென்று சமநிலையில் உள்ளன.
இந்த போட்டியில் வென்றதன் மூலம், தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்த ஆஸி. அணிக்கு சற்று மன நிம்மதி கிடைத்து இருக்கும். இதனால்இந்தூரில் மார்ச் 31ம் தேதி நடைபெற உள்ள 3வது ஒரு நாள் போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
யு.என்.ஐ.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications