கோவை, ஈரோடு பகுதிகளில் தொடர்கொள்ளை: பீதியில் மக்கள்
கோவை:
கோவை, ஈரோடு மாவட்டங்களில் அடுத்தடுத்து நடந்து வரும் தொடர் கொள்ளைச் சம்பவங்களால் மக்கள்அச்சமடைந்துள்ளனர்.
கோவை அருகே உள்ளது அவிநாசி. இங்கு எல்.ஐ.சி அதிகாரி ராசப்பன் என்பவர் குடியிருந்து வருகிறார்.புதன்கிழமை இரவு இவரும், இவரது மனைவி மற்றும் இரண்டு பெண்களும் தூங்கிக் கொண்டிருந்தனர்.
நள்ளிரவில் இவர்களது வீட்டிற்கு 6 வாலிபர்கள் கொண்ட கும்பல் ஒன்று வந்தது. இந்த கும்பல் பாறாங்கல்லைத்தூக்கிப் போட்டு அவரது வீட்டுக் கதவை உடைத்தது. இந்த சத்தம் கேட்ட ராசப்பன், அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் 25 வயது மதிக்கத்தக்க அந்த வாலிபர்கள் அவரை மிரட்டத் தொடங்கினர். அப்போது அவர்கள் சத்தம்போட முயன்ற போது அவர்களை உருட்டுக் கட்டையால் தாக்கினர். பின்னர் அவரது மனைவி மற்றும் அங்கிருந்த3 பெண்கள் அணிந்திருந்த நகைகளை பிடுங்கிக் கொண்டு தலைமறைவாயினர்.
3 பெண்களும் பறிகொடுத்த நகையின் மதிப்பு ஒரு லட்சமாகும். கொள்ளையர்கள் தாக்குதலில் காயம் அடைந்தராசப்பன், அவரது மனைவி சரஸ்வதி மற்றும் சாந்தி, காந்திமதி ஆகியோர் ஈரோட்டில் உள்ள தனியார்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஏற்கனவே பல்லடம் அருகே ஒரு கும்பல், துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டு கொள்ளையடித்துச் சென்றது. ஈரோட்டில்இதே போன்ற கொள்ளை நடந்துள்ளது. இந்த நிலையில் கோவை ஈரோடு பகுதிகளில் அதிகரித்து வரும்கொள்ளைச் சம்பவங்களால் பொதுமக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications