டெல்லி-லண்டன் புதிய விமான சேவை
லண்டன்:
லண்டனில் இருந்து டெல்லிக்கு நேரடி விமான சர்வீசை 2 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் துவக்கி உள்ளது யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனம்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு இடையே செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தினால் பிரிட்டிஸ் ஏர்வேஸ் மற்றும் ஏர்-இந்தியா நிறுவனங்கள்மட்டுமே இரு நாடுகளுக்கும் இடையே நேரடி விமான சர்வீஸ் நடத்த அனுமதிக்கப்பட்டு வந்தது.
இருநாடுகளுக்கு இடையேயான நேரடி சர்வீஸின் தேவை அதிகரித்து வருவதால் இந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட உள்ளன. அதற்கு முன்னோட்டமாகயுனைடெட் சர்வீஸ் நிறுவனம் தனது நேரடி விமான சர்வீஸை மீண்டும் துவக்கி உள்ளது.
இதற்கான துவக்க விழா வியாழக்கிழமை லண்டனில் நடைபெற்றது. இதனை துவக்கி வைத்து பேசிய இங்கிலாந்திற்கான இந்திய ஹைகமிஷனர் ஹர்தீப் புரி,
இருநாடுகளுக்கு இடையேயான நேரடி விமான சர்வீஸின் தேவை அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு மட்டும் இரண்டரை லட்சம் விசாக்களை இந்தியஹைகமிஷன் அளித்து உள்ளது.
ஆண்டுக்கு 20% என்ற அளவில் அதிகரித்து வரும் விசாக்களின் எண்ணிக்கை விரைவில் ஆண்டிற்கு 5 லட்சம் என்ற நிலையை எட்டும்.
ஆனால் அதற்கு ஏற்ற அளவில் விமான சர்வீஸ் இல்லை. தற்போது அளிக்கப்படும் விமான சர்வீஸ் 25% முதல் 35% தேவைகளை மட்டுமே நிறைவுசெய்கிறது. இதனால், பயணிகளுக்கு அதிக பாதிப்பு ஏற்படுகிறது என்றார்.
லண்டன்-டெல்லி இடையே தினசரி விமான சர்வீஸிற்கு போயிங் விமானங்கள் பயன்படுத்தப்படும் என்று யுனைடெட் ஏர்லைன்ஸ் அறிவித்து உள்ளது. மற்றஏர்லைனஸ் நிறுவனங்களும் விரைவில் நேரடி விமான சர்வீஸை துவக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐ.ஏ.என்.எஸ்
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications