இந்தியாவுடன் விளையாட ஆஸ்திரேலிய கிரிக்கெட் சங்கம் எதிர்ப்பு
சிட்னி:
இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையே நடைபெறவிருக்கும் ஒரு நாள்சர்வதேச போட்டிக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் சங்கம் (ஏ.சி.ஏ) கடும் எதிர்ப்புதெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தின் மத்தியில் ஆஸ்திரேலியா, மெல்போர்னில்இருக்கும் உள்விளையாட்டரங்கில் (இன்டோர் ஸ்டேடியம்) இந்தியா - ஆஸ்திரேலியாமற்றும் வேறொரு நாடும் பங்கேற்கும் 3 ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள்நடைபெறவுள்ளது.
ஆனால், இந்தப் போட்டியை நடத்த வேண்டாம் என ஆஸ்திரேலிய கிரிக்கெட்வாரியத்துக்கு, ஆஸ்திரேலிய கிரிக்கெட் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக ஒரு மனுவும் தாக்கல் செய்துள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
தற்போது இந்தியாவில் விளையாடி வரும் ஆஸ்திரேலிய வீரர்கள். இந்த தொடர்முடிந்தவுடன் ஆஷஸ் போட்டிக்காக இங்கிலாந்து செல்கிறார்கள். ஆஷஸ் போட்டித்தொடர் 3 மாதஙகள் நடைபெறும்.
ஆஷஸ் போட்டி தொடர் முடிந்தவுடன் மெல்போர்னில் போட்டி நடத்ததிட்டமிட்டுள்ளீர்கள். இது முடிந்த பின் ஆஸ்திரேலியாவில் நடக்கும் உள்நாட்டுகிரிக்கெட் போட்டிகளிலும் அவர்கள் விளையாட வேண்டியதிருக்கும்.
பல ஆஸ்திரேலிய வீரர்களும் சிறு ஓய்வு வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்.ஏனென்றால் நீண்ட நாட்கள் தொடர்ந்து விளையாடி வருவதால் அவர்கள் உடல்ரீதியாகவும், மன ரீதியாகவும் சோர்வடைந்துள்ளனர்.
ஓய்வின்றி விளையாடுவதால் அடுத்து அவர்கள் விளையாடவிருக்கும் ஆஷஸ்போட்டியின் வெற்றியை பாதிக்கும் என எண்ணுகின்றனர்.
ஆஷஸ் போட்டிக்கு பின் மெல்போர்ன் போட்டியில் பங்கேற்கின்றனர். இதையடுத்துஉள்நாட்டு போட்டியிலும் அவர்கள் விளையாட வேண்டியுள்ளது.
மூன்று மாதங்கள் தொடர்ந்து விளையாடிய பின், மீண்டும் மெல்போர்ன் போட்டி,உள்நாட்டு போட்டி என தொடர்ந்து விளையாட அவர்கள் விரும்பவில்லை என அந்தமனுவில் கூறியுள்ளது.
பல ஆஸ்திரேலிய வீரர்களும் தொடர்ந்து விளையாடத் தயாராக இல்லை எனஆஸ்திரேலிய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் தெரிவித்திருப்பதாகவும்கூறப்படுகிறது.
இதையடுத்து கிரிக்கெட் வாரியம் மெல்போர்னில் போட்டி நடத்துவது குறித்து மறுபரிசீலனை செய்து வருகிறது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications