அறுவை சிகிச்சை: ஜனாதிபதி நாளை வீடு திரும்புகிறார்
டெல்லி:
பித்தப்பையில் (கால் பிளாடர்) கற்கள் உருவாகியிருந்ததால் அவற்றை நீக்குவதற்காக அறுவை சிகிச்சைமேற்கொண்ட ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன் உடல் நலம் தேறி வருகிறார். அவர் சனிக்கிழமை வீடு திரும்புவார்என்று கங்காராம் மருத்துவமனை செய்திகள் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து, கங்காராம் மருத்துவமனை டாக்டர்கள் கூறுகையில், ஜனாதிபதி கே.ஆர்.நாராயணனுக்கு அறுவைசிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. வெள்ளிக்கிழமை காலை மருத்துவமனையில் அவர் நடந்தார். அவர் மிகவும்மகிழ்ச்சியாகக் காணப்படுகிறார். காலை உணவு சாப்பிட்டார் என்றனர்.
முன்னதாக, பித்தப்பையில் கற்கள் இருந்ததால் (கால் பிளாடர்) கங்கா ராம் மருத்துவமனையில் 3 நாட்களுக்கு முன்சேர்க்கப்பட்டார் ஜனாதிபதி. அவருக்கு வியாழக்கிழமை டாக்டர் பிரதீப் தலைமையிலான டாக்டர்கள் குழு அறுவைசிகிச்சை செய்தது.
பார்வையாளர்கள் யாரும் ஜனாதிபதியைப் பார்க்கக் கூடாது என்று டாக்டர்கள் கூறியிருப்பதால் அவர்ஓய்வெடுத்து வரும் அறையில் பார்வையாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
துணை ஜனாதிபதி நலம் விசாரித்தார்:
துணை ஜனாதிபதி கிருஷ்ணகாந்த் தொலைபேசி மூலம் கே.ஆர்.நாராயணனின் உடல்நிலை குறித்து விசாரித்துத்தெரிந்து கொண்டார். பிரதமர் வாஜ்பாய், நாராயணன் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு பூச்செண்டுஅனுப்பியிருந்தார்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications