சென்னையில் ஃபோர்டு நிறுவனத்தின் சாப்ட்வேர் மையம் திறப்பு
சென்னை:
ஃபோர்டு நிறுவனத்தின் தகவல் தொழில்நுட்ப சேவை மையம் ஒன்று சென்னையில் தொடங்கப்பட்டு உள்ளது.
இந்தியாவில் ஃபோர்டு கார்களை தயாரித்து வரும் இந் நிறுவனம் இப்போது தகவல் தொழில்நுட்பத்துறையிலும் நுழைந்துஉள்ளது.
ஃபோர்டு இன்பர்மேஷன் டெக்னாலஜி சர்வீஸஸ் இந்தியா (எப்.ஐ.டி.எஸ்.ஐ) என்ற கம்ப்யூட்டர் சேவை மையத்தின் இந்திய பிரிவுசென்னை டைடல் பார்க்கில் வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
ஏற்கனவே, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளில் இதுபோன்ற மையங்களை ஃபோர்டு நிறுவனம் துவக்கி உள்ளது.சென்னையில் துவங்கப்பட்டுள்ளது போர்டின் 3வது மையம் ஆகும்.
ஃபோர்டு நிறுவனத்தின் ஆசிய-பசிபிக் பிராந்தியத்திற்கு தேவைப்படும் என்ஜினியரிங் மற்றும் டிசைனிங் துறைகளுக்கானசாப்ட்வேர்களை இம்மையம் தயாரித்து அளிக்கும்.
அதோடு, இ-மெயில், கால் சென்டர் போன்ற சேவைகளுக்கான சாப்ட்வேர்களை உருவாக்கும். கோவான்ஸிஸ் இந்தியாலிமிடெட், சத்யம் கம்ப்யூட்டர் சர்வீஸஸ் லிமிடெட் மற்றும் தேர்டுவேர் சொல்யூஸன்ஸ் லிமிடெட் நிறுவனங்களுடன் இணைந்துஇந்த மையத்தை துவக்கி உள்ளது ஃபோர்டு நிறுவனம்.
சென்னை டைடல் பார்க்கில் இம்மையத்தை துவக்கி வைத்து பேசிய மத்திய தொழில்நுட்பத்துறை மந்திரி பிரமோத் மகாஜன்,
ஃபோர்டு நிறுவனம் தகுந்த நேரத்தில் தகவல் தொழில்நுட்பத்துறையில் இந்திய நிறுவனங்களின் கூட்டணியுடன் நுழைந்துஉள்ளது. அமெரிக்கா தொழில்துறையில் ஏற்பட்டுள்ள சரிவு இந்திய கம்ப்யூட்டர் துறையை பாதிக்காது.
இந்தியாவில் தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலைகளால் இந்திய கம்ப்யூட்டர் துறைக்கு பாதிப்பு இல்லை. மத்தியில் தற்போதுஉள்ள அரசு நிலையாக 5ஆண்டுகள் ஆட்சி செய்யும்.
தற்போது தாக்கல் செய்யப்பட்டு உள்ள பட்ஜெட் வரும் மே மாதம் 15ம் தேதிக்குள் தேவையான திருத்தங்களுடன்நிறைவேற்றப்படும். இதுபற்றி தொழில்துறையினர் கவலை கொள்ளத் தேவையில்லை.
தகவல் தொழில்நுட்பத் துறையில் தனக்கென தனியிடம் பெற்றுள்ள சென்னையில் இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளதுகுறிப்பிடத்தக்கது என்றார்.
இந்நிகழ்ச்சியில் தமிழக முதல்வரின் சார்பாக அவரது உரையை தமிழக அமைச்சர் தா.கிருட்டிணன் வாசித்தார்.
ஃபோர்டு நிறுவனத்தின் கம்ப்யூட்டர் சேவை மையம் சென்னையில் அமைக்கப்படுவதை வரவேற்ற முதல்வர், ஃபோர்டுநிறுவனத்தின் ஆசிய-பசிபிக் பிராந்தியத்திற்காக மட்டும் ஆரம்பிக்கப்பட்ட இந்த மையம் விரைவில், உலகம் முழுவதற்கும்தேவையான சேவைகளை அளிக்கும் அளவிற்கு வளரும். அதற்கு தேவையான உதவிகளை தமிழகம் வழங்கும் என்றுஉறுதியளித்துள்ளார்.
10 மில்லியன் டாலர் முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்டு உள்ள இந்த மையத்தின் சிறந்த சாப்ட்வேர் என்ஜினியர்கள் விரைவில்அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து மையங்களில் சென்று பணிபுரியவும் வாய்ப்பளிக்கப்படும் என ஃபோர்டு இந்தியா நிறுவனத்தின்மேனேஜிங் டைரக்டர் பில் ஸ்பென்டர் தெரிவித்தார்.
ஐ.ஏ.என்.எஸ்
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications