குரானை கிழித்த 2 முஸ்லீம்கள் கைது
ராஞ்சி:
முஸ்லீம்களின் புனிதநூலான குரானின் பக்கங்களை கிழித்தது தொடர்பாக இரண்டு பேரைஜார்காண்ட் மாநில போலீசார் கைது செய்துள்ளனர்.
இது பற்றி கிழக்கு சிங்பூமி காவல்துறை கண்காணிப்பாளர் அமிதாப் செளத்ரி கூறுகையில்,கைது செய்யப்பட்ட சாபீர் கான், கெளசல் ரசாக் ஆகியஇரண்டு பேருமே முஸ்லீம்கள்.
இவர்கள் இருவரும் மனநிலை பாதிக்கப்பட்டவர்களாக இருக்கலாம். எனவே இருவரும்மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
இந்த சம்பவத்திற்கும் வேறு ஏதாவது அமைப்பிற்கும் தொடர்பிருக்கக்கூடுமா என்பதுகுறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. அடுத்த வாரம் இந்து பண்டிகையான ராம நவமிகொண்டாடப்படவிருக்கிறது.
அப்போது ஏதாவது பிரச்சனையை உருவாக்க வேண்டும் என்பதற்காக இவர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டிருக்கக்கூடும் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.
கான் (வயது 35) முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதியான சக்சி பகுதியில் குரானின்பக்கங்களை கிழித்துக் கொண்டிருந்த போது மக்கள் பிடித்து சாக்சி காவல் நிலையத்தில்ஒப்படைக்கப்பட்டார்.
கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications